Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

உளறல்களால் கதறும் உடன்ப்பிறப்புகள்!

தன்னுடைய கடின உழைப்பு பேச்சாற்றல் செயல்திறனால் கட்சியை கரை சேர்த்து பலமுறை முதல்வராக அரியணை ஏறியவர் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர் நடத்திய கட்சி இப்போது கார்ப்பரேட் நிறுவனத்தால் நடத்தப்படும் அவலத்திற்கு தள்ளப்பட்டு விட்டது என்று கலங்குகிறார்கள் அந்த கட்சியின் உண்மையான விசுவாசிகள்.

அந்த கட்சியில் ஸ்டாலின் சில மேடைகளில் உளறுவதை போல அவருடைய மகன் உதயநிதி ஸ்டாலின் அவர்களும் மேடையில் பேசும்போது பல சமயங்களில் உளறி விடுகின்றார் நிறைய விஷயங்களை மாற்றி மாற்றிப் பேசுகிறார் என்ற பேச்சு பரவலாக இருந்து வருகின்றது அவர்கள் அதை வீடியோவாக பதிவு செய்து அதனை அதிமுகவின் தொழில்நுட்ப அணியில் இருப்பவர்களுக்கு அனுப்பிவிட உதயநிதி கூட்டங்களில் இப்போது ஆளும்தரப்பினரும் கலந்துகொள்கிறார்கள் அவ்வாறு அனுப்பும் வீடியோக்களை வைத்து மீம்ஸ் தயார் செய்து உடனடியாக சமூக வலைதளங்களில் வெளியிட்டுவிடுகிறார்கள்.

அவர்கள் மட்டும் கிடையாது அவர்களுடைய கட்சி நிர்வாகிகளும் அவ்வாறு தான் என்ற பேச்சும் சமீபகாலமாக நிரூபிக்கப்பட்டு வருகிறது என்று உடன்பிறப்புகள் புலம்பி வருகிறார்கள்.

Exit mobile version