தினமும் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் நடக்கும் நன்மைகள் மற்றும் தீமைகள்..!

0
202
Version 1.0.0

Amla juice in Tamil: உடலில் உள்ள நோயை குணப்படுத்துவதற்கு இயற்கையாக உருவாகிய காய் ஒன்று உள்ளதென்றால் அது நெல்லிக்கனி தான். நெல்லிக்காய் (Benefits of Amla juice in tamil) ஒன்று சாப்பிட்டால் அது 10 ஆப்பிள் சாப்பிட்டதற்கு ஒப்பாகும். உடல் எடை குறைப்பது முதல் நீரிழிவு நோய் வரை அனைத்திற்கும் உகந்த மருத்துவ குணமிக்க காயாக இருப்பது தான் இந்த நெல்லிக்காய். தினமும் நெல்லிக்காய் ஜூஸ் சாப்பிடுவதால் நடக்கும் நன்மைகள் மற்றும் தீமைகள் என்ன என்பதை இந்த பதிவில் (Benefits of gooseberry juice in Tamil) பார்க்கலாம்.

 நெல்லிக்காய் ஜூஸ் நன்மைகள்

நெல்லிக்காயில் புரதம், மாச்சத்து, கல்சியம் பொஸ்பரஸ், இரும்பு, நியாசின், வைட்டமின் பி1, வைட்டமின் சி, கரிச்சத்து, சுண்ணாம்பு, தாதுப் பொருட்கள், கொழுப்பு, கலோரிகள் இத்தனை வகையான சத்துக்கள் உள்ளன. அதிலும் நெல்லிக்காயில் வைட்டமின் சி-யின் அளவு அதிகமாக உள்ளது.

இதனை உண்பதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகிறது. அத்துடன் இதில் வைட்டமின் சி-க்கு அடுத்தப்படியாக புரோட்டீன் உள்ளதால் வெறும் வயிற்றில் இந்த ஜூஸ் குடித்து வரஉடல் எடை குறைப்பவர்கள் இதனை தொடர்ந்து குடித்தால் உடலில் உள்ள கொழுப்பு வெளியேறி எடை குறைந்து விடும்.

கண் பார்வை, ஞாபக மறதி, இதயம் சம்பந்தமான பிரச்சனை, சரும பிரச்சனை, ஆஸ்துமா, உடல் உஸ்ணம், மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அதிக இரத்தப்போக்கு, சிறுநீர் பிரச்சனை, நீண்ட நாள் மலச்சிக்கல் மேலும் பல பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வு என்றால் அது இந்த நெல்லிக்காய் தான்.

காலையில் வெறும் வயிற்றில் 2 அல்லது 3 நெல்லிக்காயை எடுத்து கழுவி நடுவில் உள்ள விதைகளை நீக்கி விட்டு சிறுசிறு துண்டுகளாக வெட்டி அத்துடன் சிறிய இஞ்சி துண்டு, சிறிதளவு உப்பு தண்ணீர் சேர்த்து வடிகட்டி குடித்து வந்தால் மேற்கூறிய அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்து விடும்.

தினமும் நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் விளைவுகள்

எந்த ஒரு பொருளையும் அளவுக்கு மீறி எடுத்துக் கொண்டால் அது கெடுதல் தான் நமக்கு. அந்த வகையில் தினமும் நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதை தவிர்த்து கொள்ள வேண்டும்.

ஏனென்றால் தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிடுவதால் எந்த பிரச்சனையும் ஏற்படாது. இதுவே ஜூஸ் தாயர் செய்து குடிப்பதால் 2்-க்கும் மேற்பட்ட நெல்லிக்காய் தேவைப்படுவதால் அதிக அளவில் நமக்கு குறிப்பிட்ட வைட்டமின்கள் மட்டும் நமது உடலுக்கு கிடைக்கிறது.

இதனால் செரிமான பிரச்சனை மற்றும் அசிடிட்டி போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்புள்ளது. எனவே ஒரு நாள் விட்டு ஒருநாள் நெல்லிக்காய் ஜூஸ் குடிக்கலாம். மேலும் தினமும் ஒரு நெல்லிக்கனி சாப்பிடலாம்.

மேலும் படிக்க: அரிசி சாப்பிடும் பழக்கம் உள்ளவரா நீங்கள்? அப்போ உங்க தலையில முடி இருக்காதே..!!