டீயில் மிக்சர் போட்டு குடிப்பவரா நீங்கள்.. அப்போ இந்த நோய்கள் எல்லாம் கன்பார்ம்..!

0
304
#image_title

Tea with Snacks: உலகெங்கிலும் இருக்கும் பெரும்பாலான மக்கள் விரும்பி குடிக்கும் பானங்களில் ஒன்றுதான் இந்த தேநீர். பலருக்கும் டீ இல்லாமல் ஒரு நாள் கூட இருக்க முடியாது. அந்த அளவிற்கு அவர்கள் டீ பிரியர்களாக இருப்பார்கள். மேலும் இன்றளவும் கூட ஒரு சிலர் காலை எழுந்தவுடன் டீ குடித்துவிட்டு தான் மற்ற வேலைகளை பார்ப்பார்கள். அவர்களுக்கு டீ குடிக்க வில்லை என்றால் தலைவலி ஏற்பட்டு விடும்.

மேலும் அலுவலகங்கள் போன்ற மற்ற வேலை பார்ப்பவர்கள் கூட சிறிது நேர இடைவெளியில் டீ குடித்து விட்டு தான் வேலை செய்வார்கள். ஏனென்றால் டீ குடித்து விட்ட பிறகு அவர்கள் புத்துணர்ச்சியாக இருப்பது போல் உணர்கிறார்கள்.

டீ இந்த நவீன காலத்தில் மக்களிடமிருந்து பிரிக்க முடியாத ஒன்றாக மாறி உள்ளது. இப்படி அனைவருக்கும் பிடித்த டீயுடன் நாம் சில ஸ்நாக்ஸ் வகைகளை சாப்பிடுவோம். அவ்வாறு டீயுடன் எந்த வகையான உணவுப் பொருட்களை சாப்பிடக்கூடாது என்று இந்த பதிவில் (side effects of tea with snacks in tamil) காணலாம்.

டீயுடன் சாப்பிட கூடாத உணவுப் பொருட்கள்

பொதுவாக டீயை வெறும் வயிற்றில் குடிப்பதே ஆபத்தாக தான் பார்க்கப்படுகிறது. ஏனெனில் டீ யில் காப்ஃபைன் என்ற ஒரு அமிலம் இருப்பதால் வெறும் வயிற்றில் டீயை குடிக்கும் பொழுது மலச்சிக்கல், தூக்கமின்மை போன்ற பிரச்சனையை இது உண்டாக்கிறது.

அந்த வகையில் டீ யுடன் சில பொருட்களை நாம் சேர்த்து சாப்பிடக்கூடாது. அனைவருக்கும் சூடான டீயுடன், சூடாக பொரித்த உணவுப் பொருட்கள் பிடிக்கும். அந்த வகையில் கடலை மாவால் செய்த எந்த ஒரு உணவுப் பொருட்களையும் நாம் டீயுடன் சேர்த்து சாப்பிடக்கூடாது. கடலை மாவில் செய்த பஜ்ஜி போண்டா ஆகியவை சூடான எண்ணெயில் போட்டு பொரித்து அதனை சூடான டீயுடன் குடிக்கும் பொழுது உடலுக்கு தீங்கு விளைவிக்கிறது. இதனால் ஒரு சிலருக்கு வயிற்றுக் கோளாறுகள் ஏற்பட்டு வாந்தி, வயிற்றுப்போக்கு போன்றவை ஏற்படலாம்.

காலையில் டீயுடன் பிஸ்கட் சாப்பிட்டால் சர்க்கரை வியாதி வருவதற்கு வாய்ப்பு உண்டு. மேலும் சக்கரை வியாதி உள்ளவர்கள் டீயுடன் பிஸ்கட் சாப்பிடுவதை குறைத்து கொள்ளலாம்.

மேலும் மதிய உணவிற்கு பிறகு அல்லது உணவு சாப்பிட்ட பிறகு டீ குடிப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் நாம் சாப்பிட்ட உணவின் சத்துக்களும் டீயில் உள்ள காப்ஃபைன் அமிலமும் ஒன்றோடு ஒன்று சேர்ந்து அது மேலும் வயிற்றிற்கு செரிமான பிரச்சனையை உண்டு செய்யலாம்.

மேலும் டீயுடன் பொரித்த உணவுகளை சாப்பிடும் பொழுது டீயில் உள்ள டானின் செரிமான பிரச்சனைகளை உண்டு செய்யலாம்.

மேலும் டீயுடன் எந்த வகையான கீரை உணவுகளையும் உட்கொள்ளக்கூடாது. கீரை சாப்பிட்ட உடனும் டீ குடிக்க கூடாது. ஏனெனில் டீயில் டானின் மற்றும் ஆக்ஸிலட்டுகள் இருப்பதால் கீரையில் உள்ள இரும்பு சத்து உடன் சேர்ந்து இவை செரிமான பிரச்சனையை உண்டு செய்யலாம்.

டீயுடன் முட்டையை சாப்பிடுவது தவிர்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் முட்டையில் உள்ள புரோட்டின் டீயில் உள்ள டானின் அமிலத்துடன் சேரும்பொழுது மலச்சிக்கல் போன்ற பிரச்சினையை உண்டு செய்கிறது.

மேலும் டீயில் மஞ்சள் கலந்த எந்த ஒரு பொருட்களையும் உட்கொள்ள கூடாது.

மேலும் படிக்க: உணவு சாப்பிடும் போது கட்டாயம் இதை செய்யாதீர்கள்..!! ஆபத்தாகிவிடும்..!!