வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துவரும் மாநாடு திரைப்படம் தீபாவளியன்று வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துத்துள்ள படம் ‛மாநாடு’ ப்டத்தில் கல்யாணி பிரியதர்ஷன் நாயகியாக
நடித்துள்ளார். எஸ்.ஜே.சூர்யா , எஸ்.ஏ.சந்திரசேகர்,பிரேம்ஜி உள்ளிட்டட் பலர் நடித்துள்ளனர். இப்படத்தின்
படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.
இந்நிலையில் இப்படம் தீபாவளிக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பிரச்னையால் தற்போதைய சூழலில் தியேட்டர்கள் 50 சதவீதம் மட்டுமே
திறக்கப்பட்டுள்ளதால் எப்படியும் தீபாவளிக்குள் 100 சதவீதம் அனுமதி அளிக்கப்படும் என்ற
நம்பிக்கையில் இந்த முடிவை படக்குழுவினர் எடுத்துள்ளனர்.
அதேசமயம் அன்றைய தினம் சிவா இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள அண்ணாத்த படம் வெளியாகும் என முன்கூட்டியே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் வினோத் இயக்கத்தில் தல அஜித்தின் வலிமை படத்தையும் வெளியிட பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது.
இந்த இரண்டு படங்களும் வெளியாகும் பட்சத்தில் சிலம்பரசனின் மாநாடு வெளியாவது சந்தேகமே என சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.