Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சிம்புவுக்கு நல்ல புத்தியை கொடுத்த ஐயப்பன்: மீண்டும் தொடங்கும் மாநாடு!

சிம்புவுக்கு நல்ல புத்தியை கொடுத்த ஐயப்பன்: மீண்டும் தொடங்கும் மாநாடு!

நடிகர் சிம்பு மீது இருக்கும் ஒரே ஒரு குற்றச்சாட்டு என்னவெனில் அவர் சரியாக படப்பிடிப்பிற்கு வருவது இல்லை என்றும் படக்குழுவினருக்கு ஒத்துழைப்பு தருவதில்லை என்பதும் தான். சிம்புவுக்கு இன்னும் ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கும் நிலையில் ஒழுங்காக படப்பிடிப்புக்கு வந்து சரியான இடைவெளியில் திரைப்படங்களை வெளியிட்டால் அவர் இன்னும் திரையுலகில் முன்னணி நடிகர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாக இருந்த மாநாடு திரைப்படம் திடீரென டிராப் செய்யப்பட்டது. இதற்கு காரணமாக சிம்பு சரியான நேரத்தில் படப்பிடிப்பிற்கு வருவது இல்லை என்றும், அப்படியே வந்தாலும் படக்குழுவினர்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பதில்லை என்றும் குற்றச்சாட்டு கூறப்பட்டது

இந்த நிலையில் மாநாடு படத்தை மீண்டும் தொடங்குவது குறித்த பேச்சுவார்த்தை நடந்ததாகவும், பேச்சுவார்த்தையில் சிம்புவின் தாயார் உஷா ராஜேந்தர் அவர்கள் கலந்துகொண்டு, இனிமேல் சிம்பு சரியான நேரத்தில் படப்பிடிப்பிற்கு வர தான் உத்தரவாதம் அளிப்பதாகவும் கூறி இருந்தார்

இதனை அடுத்து மாநாடு படத்தின் படப்பிடிப்பு வேலைகள் தொடங்கின. இந்த நிலையில் சிம்பு சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மாலை அணிந்து உள்ளார். இந்த நேரத்தில் சிம்புவை சந்தித்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மாநாடு படத்தில் சிம்பு மீண்டும் நடிப்பதை உறுதி செய்ததோடு, விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் தேதியும் அறிவிக்கப்படும் என தெரிவித்தார்

சிம்பு ஐயப்பனுக்கு மாலை போட்ட பிறகு அவருக்கு எல்லாமே நல்லவிதமாக நடக்கும் என்றும் ஐயப்பன் சிம்புவுக்கு அருள்புரிவார் என்றும் அவரது ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்

Exit mobile version