Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சிம்பு- கமல் கூட்டணி உறுதி… அடுத்த கட்டத்துக்கு சென்ற பேச்சுவார்த்தை

சிம்பு- கமல் கூட்டணி உறுதி… அடுத்த கட்டத்துக்கு சென்ற பேச்சுவார்த்தை

நடிகர் சிம்பு கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்துக்காக நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் கடந்த ஆண்டு நவம்பர் 25ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் மாநாடு.  இந்த படத்தில் நடிகர் சிம்புவுடன், எஸ்ஜே சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்டவர்கள் இணைந்து நடித்திருந்தனர். சிம்புவின் சினிமா வாழ்க்கையில் இன்றளவுக்கு மிகப்பெரிய ஹிட்டாக மாநாடு திரைப்படம் அமைந்துள்ளது. திரையரங்குகளில் மட்டும் 117 கோடி ரூபாய்க்கு மேல் இந்த படம் வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து சிம்புவின் மார்க்கெட் எக்கச்சக்கமாக விரிவடைந்துள்ளது. அடுத்து கௌதம் மேனன் இயக்கத்தில் நடித்துள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படம் செப்டம்பர் 15 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இந்நிலையில் சிம்பு அடுத்து எந்த படத்தில் நடிக்கப் போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

அந்த வரிசையில் இயக்குனர் கோகுல், மிஷ்கின் உள்ளிட்ட பலரின் பெயர்கள் அடிபடுகின்றன. அந்த வரிசையில் இப்போது சிம்பு – கமல் கூட்டணி பற்றிய பேச்சுகள் எழுந்துள்ளன. கமலின் ராஜ்கமல் நிறுவனத்துக்காக சிம்பு ஒரு படம் நடிக்க உள்ளது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது என சொல்லப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் சொல்லப்படுகிறது. இந்த படத்தை இயக்குபவர் என்பது குறித்தும் கேள்விகள் எழுந்துள்ளன. சிம்புவின் சினிமா வாழ்க்கையின் இரண்டாவது இன்னிங்ஸில் ஏறுமுகமாக சென்று கொண்டிருக்கிறார்.

Exit mobile version