Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

21 கிலோ எடையை  குறைத்து ஃபிட்னஸ் பிரிக்காக மாறிய சிம்பு!

கோலிவுட்டின் நடிகர்களில் ஒருவரான சிம்பு தற்போது மாநாடு படத்தில் நடித்து வருகிறார்.அந்தப் படத்திற்காக தன்னுடைய உடலை தயார் செய்வதற்காக அதிக காலம் எடுத்துக் கொண்டாராம்.லண்டன் சென்று அவர் எடையை குறைக்க உடற்பயிற்சி செய்தார் என்று தகவல்கள் வெளிவந்தன. மேலும் அவரது புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

இதன் பிறகு சிம்பு மாநாடு படத்தின் ஷூட்டிங்கில் பங்கேற்க தொடங்கினார். சென்னையில் சில தினங்கள் படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில் ஐதராபாத்தில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் செட் அமைத்து படப்பிடிப்பு நடத்தப்பட்டது.அதில் மொத்த குழுவினரும் படக்குழுவினரும் கலந்து கொண்டனர்.

கொரோனவைரஸ் நாடு முழுவதும் பரவ தொடங்கியதனால் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.இதனால் படப்பிடிப்பை தொடர முடியவில்லை.படக்குழு சூட்டிங் ரத்து செய்து விட்டு சென்னைக்கு திரும்பியது.

அதன் பிறகு சிம்பு அவர் தன்னுடைய வீட்டிலேயே முழு நேரத்தையும் செலவிட்டு வருகிறார்.அப்படி அவர் வீட்டில் என்னதான் செய்கிறார் என ரசிகர்கள் யோசித்துக் கொண்டிருந்த நிலையில் தனது குடும்பத்தினருக்காக வித விதமாக சமைப்பது,உடற்பயிற்சி செய்வது உள்ளிட்ட பல விஷயங்களை செய்து வந்திருக்கிறார் நடிகர் சிம்பு.அந்த வீடியோக்களும் அடிக்கடி சமூக வலைத்தளத்தில் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியது.

இந்த லாக் டவுன் நேரத்தில் சிம்பு தன்னுடைய உடலை பிட்டாக மாற்றுவதற்காக அதிக நேரத்தைச் செலவிட்டு வந்திருக்கிறார் என தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கிறது.100 கிலோ எடையிலிருந்து தற்போது அவர் 79 கிலோ எடை குறைந்திருக்கிறார் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

சிம்புவின் புகைப்படத்தை இதற்கு முன்பு ரசிகர்களை பார்த்து இருந்தாலும் தற்போது அவர் 21 கிலோ எடையை குறைந்திருக்கிறார் என கூறப்படுவதால் அவரது தோற்றம் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

Exit mobile version