Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

VTK வெற்றியைக் கொண்டாடிவிட்டு, அடுத்த படத்துக்கு சென்ற சிம்பு… இன்று தொடங்கிய ஷூட்டிங்

VTK வெற்றியைக் கொண்டாடிவிட்டு, அடுத்த படத்துக்கு சென்ற சிம்பு… இன்று தொடங்கிய ஷூட்டிங்

சிம்பு தற்போது பத்து தல படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவரோடு கௌதம் கார்த்திக்கும் நடிக்கிறார்.

நடிகர் சிம்பு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒப்பந்தம் ஆன திரைப்படம் ‘பத்து தல’. அப்போது மஃப்டி என்ற பெயரில் தொடங்கப்பட்டது. கன்னட படமான மஃப்டி ரீமேக்கை இயக்க ஒரிஜினல் கன்னட படத்தின் இயக்குனர் நர்தனே ஒப்பந்தம் செய்யப்பட்டார். படமும் தொடங்கப்பட்டு சில நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. ஆனால் சிம்புவின் கால்ஷீட் சொதப்பல்களால் படம் கிடப்பில் போடப்பட்டது.

ஒரு கட்டத்தில் படம் கைவிடப்பட்டதாகவே நினைத்த நிலையில் திடீரென்று ‘பத்து தல’ என்ற பெயரில் தொடங்கப்பட்டது. இயக்குனர் நர்தனுக்கு பதில் காந்தி கிருஷ்ணா ஒப்பந்தம் செய்யப்பட்டார். இசையமைப்பாளராக ஏ ஆர் ரஹ்மான் ஒப்பந்தம் செய்யப்பட்டார். சிம்பு இல்லாத மற்ற காட்சிகளை படக்குழுவினர் தென் தமிழகத்தில் படமாக்கி முடித்துள்ளனர். சிம்பு ‘வெந்து தணிந்தது காடு’ ஷூட் முடிந்ததும் இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்று சொல்லப்பட்டது.

இப்போது சிம்பு மாநாடு மற்றும் வெந்து தணிந்தது காடு ஆகிய திரைப்படங்களை நடித்து முடித்துள்ள நிலையில் ஏற்கனவே ஒத்துக்கொண்ட பத்து தல படத்தில் நடித்து வருகிறார். கடந்த மாதம் கர்நாடகாவில் சில நாட்கள் ஷூட்டிங் நடந்த நிலையில் தற்போது இன்று மீண்டும் சென்னையில் தொடங்கியுள்ளது. மாநாடு மற்றும் வெந்து தணிந்தது காடு ஆகிய படங்களுக்குப் பிறகு சிம்புவின் அடுத்த ரிலீஸாக பத்து தல திரைப்படம் உருவாகி வருகிறது.

Exit mobile version