Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தந்தையின் சிகிச்சை முடிந்து இந்தியா திரும்பிய சிம்பு… அடுத்த ப்ளான் இதுதான்!

நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படம் செப்டம்பர் 15 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

தமிழ் திரைப்படத்துறையில் நடிகர், இயக்குனர், பாடகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் என பன்முகம் கொண்டு 40 ஆண்டுகளுக்கும் மேலாக  பணியாற்றி வருபவர் டி ராஜேந்தர். இவர் திரைதுறை மட்டுமின்றி தமிழக அரசியலிலும் பங்களித்துவருகிறார். லட்சிய திமுக என்ற கட்சியை தற்போது நடத்தி வருகிறார். கடந்த மே மாதம் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு வயிற்றில் ரத்தக்கசிவு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அதையடுத்து அவரின் மகன் நடிகர் சிம்பு, மேல் மருத்துவ சிகிச்சைக்காக தனது தந்தையை நியுயார்க் அழைத்து சென்றார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு குணமாகி வருவதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து அவர் விரைவில் தமிழகம் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக வெளிநாட்டில் கூடவே இருந்து தந்தையைப் பார்த்துக்கொண்ட சிம்பு தற்போது இந்தியா திரும்பியுள்ளார். TR இன்னும் கொஞ்சநாள் அங்கு ஓய்வு எடுத்துக்கொண்டு பின்னர் இந்தியா திரும்புவார் என சொல்லப்படுகிறது. முதல் வேலையாக ‘பத்து தல’ படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ள உள்ளாராம். மொத்தம் அந்த படத்துக்காக 24 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளார்.

மேலும் இந்தியா திரும்பியதும் அவர் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தையும் பார்த்துள்ளாராம். விரைவில் இந்த படத்தின் ஆடியோ ரிலீஸ் நடக்கலாம் என சொல்லப்படுகிறது. இதற்கிடையில் சிம்பு கௌரவ வேடத்தில் நடித்துள்ள மஹா திரைப்படமும் அடுத்த வாரம் ரிலீஸ் ஆகவுள்ளது.

Exit mobile version