Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வீட்டில் அமர்ந்து கொண்டே படத்தில் நடித்த சிம்பு!

நடிகர் சிலம்பரசன் நடிப்பில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தயாராகி வரும் திரைப்படம் மாநாடு. இந்த திரைப்படத்தில் நடிகர் சிலம்பரசன் நடிக்காமலேயே அவர் நடித்து இருக்கின்றார் என்று தெரிவித்தால் யாராவது நம்ப முடிகின்றதா? ஆம் அதுதான் உண்மை.

வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் உருவாகி வரும் மாநாடு திரைப்படத்தில் சிலம்பரசன், கல்யாணி பிரியதர்ஷன், எஸ். ஜே. சூர்யா இயக்குனர் பாரதிராஜா, எஸ். ஏ. சந்திரசேகர் ஒய் .ஜி மகேந்திரன் டேனியல் பாலாஜி, மனோஜ், பாரதி பிரேம்ஜி , மற்றும் படவா கோபி போன்ற மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.

இந்த திரைப்படத்திற்கான பட படிப்பானது ,ஹைதராபாத் சென்னை போன்ற இடங்களில் இரு கட்டங்களாக நடந்து முடிந்து இருக்கின்றது. அதன் பிறகு தொற்று வந்துவிட்ட காரணத்தால், படப்பிடிப்பை நடத்த இயலாமல் போயிற்று மறுபடியும் படப்பிடிப்பு கடந்த நவம்பர் மாதத்தில் ஆரம்பமானதும் புதுச்சேரியில் படப்பிடிப்பை தொடங்கினார்கள். புதுச்சேரி படப்பிடிப்பின்போது தான் நிவர் புயல் வந்தது. அதன் காரணமாக வெளி படப்பிடிப்பு எதுவும் நடத்தப்படவில்லை ஆனாலும் சிலம்பரசன் ஆதரவு காரணமாக உள் படப்பிடிப்புகள் நடந்து வந்தது.

அதன் அடுத்த கட்டமாக, புதுச்சேரி, மற்றும் ஏற்காடு, போன்ற பகுதிகளில் சுமார் ஒரு வாரகாலம் படப்பிடிப்பு நடந்து நிறைவு பெற்றிருக்கிறது. அதிலே சிலம்பரசன், அஞ்சனா கீர்த்தி, கருணாகரன். பிரேம்ஜி உள்ளிட்டோர் நடிக்கும் காட்சிகளை படமாக்கி இருக்கிறார்கள். ஆனாலும் இவர்களில் ஒருவர் கூட படப்பிடிப்பு தளத்திற்கு வரவில்லையாம் அனைத்து நடிகர்கள் உடைய டூப் நடிகர்கள் தான் படப்பிடிப்பில் நடித்திருக்கிறார்கள்.

நடிகர்கள் உடைய தேதிகளை பெற்றுக்கொண்டு படபிடிப்பு செய்வதில் சிக்கல் இருக்கும் காரணத்தால்,டூப் போட்டு சரி செய்து விடலாம் என்று முடிவெடுத்து விட்டாராம் இயக்குனர். மலைப் பகுதியான ஏற்காடு பகுதியில் நடைபெறும் சண்டை காட்சிகள்,மற்றும் சேசிங் காட்சிகள் தான் படமாக்கப்பட்டிருக்கிறது, அதன் காரணமாக டூப்பை வைத்து அடையாளம் தெரியாத அளவிற்கு படத்தை எடுத்து முடித்து விட்டார்கள் என்று சொல்லப்படுகின்றது. ஆகவே படத்தின் கதாநாயகன் சிலம்பரசன் இல்லாமலேயே திரைப்படத்தில் அவர் நடித்த படப்பிடிப்பு சிறப்பாக வந்திருக்கிறது. என்று ஒரு தகவல் தெரிவிக்கின்றது

Exit mobile version