Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சிம்புவின் 48வது திரைப்படம்! மூன்று ஹீரோயினியா வெளிவந்த நியூ அப்டேட்?

simbus-48th-movie-three-heroines-released-new-update

simbus-48th-movie-three-heroines-released-new-update

சிம்புவின் 48வது திரைப்படம்! மூன்று ஹீரோயினியா வெளிவந்த நியூ அப்டேட்?

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சிம்பு. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் இருந்து வந்தது.அந்த  கொரோனா சமயத்தில் உடல் எடையை முற்றிலும் குறைத்து இப்போது ஆளே மாற்றம் அடைந்து இருக்கின்றார் நடிகர் சிம்பு. இவர் நடிப்பில் அண்மையில் ஈஸ்வரன், மாநாடு, வெந்து தணிந்த காடு போன்ற படங்கள் வெளியானது.

தற்போது பத்து தல அதற்கு அடுத்து சிம்பு 48 என பிசியாக இருக்கின்றார். மேலும் கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு, கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர், கௌதம் மேனன் என பல முன்னணி நடிகர்கள் நடித்திருக்கும் இந்த படம் வரும் மார்ச் 30ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி வரும் நிலையில் படத்தின் டிரைலரும் வெளியாகிவிட்டது,

மேலும் ஆடியோ வெளியீட்டு விழாவும் நடந்து முடிந்தது. அதில் சிம்புவின் என்ட்ரி அவர் பேசிய விஷயங்கள் என அனைத்தும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதனைத் தொடர்ந்து தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் கமலஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

மேலும் இந்த படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடிக்க வைக்க நடிகைகள் பூஜா ஹெட்ச், ராஷ்மிகா மந்தனா மற்றும் திஷா படானியை தேர்வு செய்து வைத்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த மூவரில் யார் சிம்புவிற்கு ஜோடியாக நடிப்பார்கள் என இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை இதில் யார் நடித்தாலும் சிம்புவுடன் நடிக்கும் முதல் படம் என்பதால் புதிய ஜோடிக்கான ரசிகர்கள் ஆவலாக காத்துக் கொண்டுள்ளனர்.

Exit mobile version