Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மூட்டு வலியை சட்டுனு துரத்தி அடிக்கும் எளிமையான வீட்டு வைத்தியங்கள்!!

Simple home remedies to get rid of joint pain fast!!

Simple home remedies to get rid of joint pain fast!!

மூட்டு வலியை சட்டுனு துரத்தி அடிக்கும் எளிமையான வீட்டு வைத்தியங்கள்!!

ஒருவருக்கு மூட்டு வலி ஏற்பட்டால் அவரால் அமர்வது,நடப்பது,நிற்பது போன்ற எதையும் செய்ய இயலாது.இன்று 30 வயதை கடந்த பலர் மூட்டு வலியால் அவதியடைந்து வருகின்றனர்.எலும்பு தேய்மானம்,கால்சியம் குறைபாடு,வயது முதுமை போன்ற பல காரணங்களால் மூட்டுவலி ஏற்படுகிறது.

எவ்வித சிகிச்சையின்றி மூட்டு வலியை போக்க உதவும் அற்புத வீட்டு வைத்தியங்கள்:

1)இஞ்சி
2)தேன்

ஒரு துண்டு இஞ்சியை தோல் நீக்கி இடித்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.பிறகு ஒரு டம்ளர் தண்ணீரில் இஞ்சி சாறு சேர்த்து அடுப்பில் வைத்து கொத்திக்க வைக்க வேண்டும்.

இதை ஒரு டம்ளருக்கு வடிகட்டி சிறிது தேன் சேர்த்து பருகி வந்தால் மூட்டு வலிக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.

1)மஞ்சள்
2)தண்ணீர்

ஒரு டம்ளர் சூடான நீரில் சிட்டிகை அளவு மஞ்சள் தூள் சேர்த்து கலக்கி குடித்து வந்தால் மூட்டு வலிக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.

1)திரிபலா பொடி
2)தேன்
3)தண்ணீர்

200 மில்லி தண்ணீரில் 1/2 தேக்கரண்டி திரிபலா பொடி சேர்த்து கொதிக்க விட்டு வடிகட்டி குடித்து வந்தால் மூட்டு வலி நிரந்தரமாக குணமாகும்.

1)ஆப்பிள் சீடர் வினிகர்

100 மில்லி தண்ணீரில் 3 சொட்டு ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து பருகி வந்தால் மூட்டு வலிக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.

1)எள்
2)தேங்காய் எண்ணெய்

ஒரு தேக்கரண்டி எள்ளை வாணலியில் போட்டு கருகிடாமல் வறுத்தெடுத்துக் கொள்ள வேண்டும்.பிறகு அதை அரைத்து 150 மில்லி தேங்காய் எண்ணையில் சேர்த்து காய்ச்சி மூட்டுகளில் தடவி வந்தால் அந்த இடத்தில் ஏற்பட்ட வலி,வீக்கம் அனைத்தும் குணமாகும்.

Exit mobile version