Kitchen Tips in Tamil: உங்கள் சமையலறையில் எறும்பு, கரப்பான் பூச்சி தொல்லையா? இதை ட்ரை பண்ணுங்க போதும்..!

0
304
#image_title

Kitchen Tips in Tamil: நமது உடல் ஆரோக்கியத்தை தீர்மானிக்கும் இடம் என்றால் அது சமையலறை தான். ஏனென்றால் நாம் உண்ணும் உணவில் தான் நாம் எந்த மாதிரியான சத்துக்களை பெறுகிறோம் என்பது உள்ளது. அத்தனை முக்கியத்துவம் வாய்ந்த இந்த உணவு பாதுகாப்பான முறையில் தான் நாம் பெறுகிறோமா என்று கேட்டால் சந்தேகம் தான். காரணம் நம் வீட்டில் எப்போதும் அழையா விருந்தாளியாக இருப்பது இந்த கரப்பாம்பூச்சி, எறும்பு, வண்டு, ஈ போன்றவை தான். இவைகள் பெரும்பாலும நாம் பயன்படுத்தும் சமையலறையில் தான் இருக்கிறது. நாம் இந்த பதில் நம் வீட்டு சமையலறையில் இருந்து எவ்வாறு கரப்பான் பூச்சி, எறும்பு போன்றவற்றை சுலபமாக விரட்டலாம் என்று பார்க்கலாம்.

எறும்பை விரட்டுவதற்கு 

எறும்புகள் எப்போதும் உலாவிக்கொண்டு இருக்கும் ஒரு உயிர். சமையல் அறையில் இது சர்க்கரை, செய்து வைத்த உணவு என்று அனைத்திலும் ஏறிவிடும். இதனை விரட்டுவதற்கு சமையலறையில் எறும்பு வரும் பாதையில் எலுமிச்சை பழத்தை பிழிந்தால் எலுமிச்சை பழத்தின் வாசனைக்கு எறும்புகள் வராது. மேலும் எலுமிச்சை பழத்தை இரண்டாக வெட்டி வைத்தாலும் எறும்புகள் (Erumbu Varamal Iruka Tips) வராது.

புதினா ஸ்ப்ரே தாயர் செய்து அதனை எறும்புகள் வரும் பாதையில் தெளித்தால் புதினா வாசனைக்கு எறும்புகள் வராது. மேலும் சர்க்கரை, வெல்லம் போன்ற வேறு எந்த உணவு பொருட்களிலாவது எறும்புகள் ஏறினால் அதில் இரண்டு கிராம்பு துண்டை போட்டால் எறும்புகள் வராது.

கரப்பான் பூச்சி

கரப்பான் பூச்சி (Karappan poochi varamal iruka tips) நாம் உண்ணும் உணவில் அமர்ந்து பாக்டீரியாக்களை உருவாக்குகிறது. இதனால் அந்த உணவை உண்பவர்களுக்கு உடல்நலம் பாதிக்கும் அபாயம் ஏற்படுகிறது. இது மிதமான வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் உள்ள இடங்களில் காணப்படுகிறது. இது சமையலறையில் வந்தால் பேக்கிங் சோடாவை அது வரும் பாதைகளில் இல்லது சமையலறையில் உள்ள மூலை முடுக்களில் போட்டால் கரப்பான் பூச்சி வராது.

மேலும் வேப்பிலையை சமையலறையில் உள்ள ஜன்னலில் வைத்தால் இதன் வாசனைக்கு கரப்பான் பூச்சி வராது. வேப்ப எண்ணெயை அது வரும் பாதைகளில் தெளித்தால் இதன் தொல்லை ஒளிந்துவிடும்.

ஈ வராமல் தடுக்க

ஈ (ee varamal iruka tips) வரும் பாதைகளில் துளசி செடியை வைத்தால் ஈக்கள் வராது. ஏனென்றால் துளசி செடி மீது ஈக்கள் அமராது. மேலும் துளசியை பொடி செய்து அதனை சமையல் அறைகளில் தெளித்தால் ஈக்கள் வராது.

வண்டு வராமல் தடுக்க

வண்டு அதிகமாக நாம் சமைக்கும் அரசி, உளுந்து, பருப்பு அல்லது வேறு ஏதாவது தானியங்களில் தான் அதிகமாக இருக்கும். அதனை நீக்கி விட்டு சமையல் செய்வதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். எனவே அவ்வாறு வராமல் இருக்க தானியங்கள் மற்றும் அரிசிகளில் இரண்டு வரமிளகாயை கிள்ளி போட்டால் வண்டுகள் (Vandu varamal iruka tips) வராமல் இருக்கும்.

பல்லிகள் தொல்லை நீங்க

சமையல் அறையில் பல்லிகள் அதிகம் காணப்பட்டால் முட்டை ஓட்டை வைத்தால் அதனை பார்த்து பல்லிகள் பயந்து வராமல் இருக்கும்.  பூண்டை நசுக்கி வைத்தால் அந்த வாசனைக்கு பல்லிகள் வராது. அதன் பிறகு ஜன்னலில் மயிலிறகு வைத்தால் அதனை கண்டும் பல்லிகள் வராமல் (Palli varamal iruka tips)இருக்கும்.

மேலும் படிக்க:  பருப்பு சேர்க்காமல் சுவையான ரோட்டு கடை இட்லி சாம்பார் செய்வது எப்படி?