நரம்புத் தளர்ச்சி, இடுப்பு வலி, மூக்கடைப்பு போன்ற நோய்களிலிருந்து தீர்வு காணும் எளிய இயற்கை வைத்தியம்..!!

0
103

*முருங்கை இலைச் சாற்றில் எலுமிச்சம் பழச்சாறு மற்றும் தேன் கலந்து முகத்தில் தடவி வர பருக்களும், கரும்புள்ளிகளும் மறையும்.

*வல்லாரைக் கீரையுடன் மிளகு சேர்த்து, அரைத்து இரவு நேரத்தில் சாப்பிட்டு வந்தால் நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

*அத்திப் பழத்தை தேனில் ஊறவைத்து சாப்பிட்டால் மாதவிடாயின்போது ஏற்படும் வயிற்று வலி குணமாகும்.

*விரலி மஞ்சளை சுட்டு அந்தப் புகையை முகர்ந்தால் மூக்கடைப்பு மற்றும் சளி விரைவில் குணமடையும்.

*கொத்தமல்லி தழையை அரைத்து, தினமும் காலை எழுந்தவுடன் வெறுவயிற்றில் குடித்துவர தலைவலி நீங்கும்.

*கொப்பரைத் தேங்காயை கசகசாவுடன் சேர்த்து சாப்பிட்டால் வாய்ப்புண் குணமாகும்.

*சாதம் வடித்த கஞ்சியில் ஒரு ஸ்பூன் நெய்யுடன் சிறிதளவு சீரகம் சேர்த்து, கலந்து குடித்தால் இடுப்பு வலி குணமாகும்.

*புதினா இலையை நிழலில் காயவைத்து பொடிசெய்து உப்புடன் சேர்த்து பல் துலக்கினால் பற் கூச்சம் குணமாகும்.

*புழுங்கல் அரிசி வடித்த தண்ணீரில் சிறிதளவு உப்பையும், வெண்ணெய்யையும் கலந்து குடித்தால் வயிற்றுக் கடுப்பு குணமாகும்.

*சிறிது சுக்குடன் கருப்பட்டி, 4  மிளகு சேர்த்து நன்கு பொடித்து 2 வேளை சாப்பிட்டால் அஜுரணம் குணமாகி பசி ஏற்படும்.