Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கணவன் மனைவி இடையே உள்ள கருத்து வேறுபாடு நீங்கி ஒற்றுமை அதிகரிக்க எளிய பரிகாரம்!!

#image_title

கணவன் மனைவி இடையே உள்ள கருத்து வேறுபாடு நீங்கி ஒற்றுமை அதிகரிக்க எளிய பரிகாரம்!!

திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்ற பழமொழி உண்டு. திருமணமான தம்பதிக்கு மன ஒற்றுமை, கருத்து ஒற்றுமை என்பது மிகவும் முக்கியம். ஆனால் இன்றைய காலத்தில் இளம் வயது தம்பதிக்கு போதிய பக்குவம் இல்லாததால் அடிக்கடி சண்டையிட்டு வருகின்றனர்.

இதனால் திருமண வாழ்க்கை சில ஆண்டுகளில் கசந்து விடுகிறது. கணவன் மனைவி ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு வாழ்க்கையை நடத்தினால் தான் குழந்தைகள் நல் வழியில் வளருவாரகள். பெற்றோர்களை பார்த்து தான் பிள்ளைகள் வாழக்கையை வாழ கற்றுக் கொள்வார்கள்.

கணவன் மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்க வெற்றிலை பரிகாரம் செய்வது குறித்த தெளிவான விளக்கம் கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது.

தேவைப்படும் பொருட்களின் விவரம்:-

*வெற்றிலை

*பச்சை கற்பூரம்

*ஸ்கெட்ச் பேனா அல்லது குங்குமம்

*குண்டு மஞ்சள்

*கணவன், மனைவியின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ

*பிளாஸ்டிக் டப்பா

பரிகாரம்:-

முதலில் இரண்டு வெற்றிலையை எடுத்து கொள்ளவும். அதில் ஒரு வெற்றிலையில் கணவன் பெயரை எழுதிக் கொள்ளவும். மற்றொரு வெற்றிலையில் மனைவி பெயரை எழுதிக் கொள்ளவும். பெயர் எழுத ஸ்கெட்ச் பேனா அல்லது குங்குமம் பயன்படுத்தலாம். ஆனால் குங்குமத்தை கரைத்து அதை பயன்படுத்தி பெயர் எழுதினால் சிறப்பு.

அடுத்து ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் ஒரு கணவன் பெயர் எழுதிய வெற்றிலையை வைக்கவும். அதன் மேல் அவரின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோவை வைக்கவும்.

அடுத்து மனைவி பெயர் எழுதிய வெற்றிலையை வைக்கவும். அதன் மேல் அவரின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோவை வைக்கவும்.

பிறகு அதன் மேல் 2 குண்டு மஞ்சள் மற்றும் சிறிதளவு பச்சை கற்பூரத்தை போட்டு டப்பாவை மூடிவிடவும். இதை யார் கண்கள் மற்றும் கைகளுக்கு படாத ஒரு இடத்தில் வைக்கவும். வாரம் ஒரு முறை டப்பாவில் உள்ள வெற்றிலையை மட்டும் மாற்றவும். பழைய வெற்றிலையை யார் காலும் படாத இடத்தில் போட்டுவிடவும். பின்னர் புது வெற்றிலையை எடுத்து கணவன் மனைவி பெயரை எழுதி ஏற்கனவே அந்த டப்பாவில் வைக்கவும்.

அதேபோல் 48 நாட்களுக்கு ஒருமுறை குண்டு மஞ்சள் மற்றும் பச்சை கற்பூரத்தை நீக்கி விட்டு புது மஞ்சள் மற்றும் பச்சை கற்பூரத்தை வைக்கவும். ஒருமுறை மஞ்சள் கிழங்கு மாற்றுவதற்குள் நிச்சயம் இருவரின் ஒற்றுமையும் மேம்படும்.

Exit mobile version