வறுமை நீங்கி செல்வம் அதிகரிக்க எளிய பரிகாரம்..!!
பரிகாரம் 01:
செவ்வாய் அல்லது வெள்ளி அன்று இதை செய்யவும். ஒரு கண்ணாடி கிளாஸில் பச்சரிசி நிரப்பி பெரிய துண்டுகள் பச்சைக் கற்பூரம் 3 வைத்து அதன் நடுவில் 3 மயிலிறகு சொறுகி வைக்கவும்.
இதை உங்கள் வீட்டு ஹாலில் எதாவது ஒரு இடத்தில் வைக்கவும். வெளி ஆட்கள் கைகள் தொடாமல் பார்த்துக் கொள்ளவும்.
48 நாட்களுக்குப் பிறகு பச்சரிசியை மாற்றவும். பழையதை கால் படாத இடத்தில் போடவும். மயிலிறகு அதையே பயன்படுத்தலாம்.
பச்சைக் கற்பூரம் கரைந்து இருக்கும். புதிதாக வைக்கவும். 3 மாதத்திற்குள் நல்ல முன்னேற்றம் தெரியும்.
பரிகாரம் 02:
மிகச் சிறிய மண் செம்பு(மண் பானை) வாங்கிக் கொள்ளவும். நாட்டு மருந்து கடைகளில் நவதானியம் வாங்கிக் கொள்ளவும்.
வெள்ளிக் கிழமை காலை 6-7 மணிக்குள் அந்த சிறிய மண் செம்பில் இந்த நவ தானியத்தை செம்பு நிறையும் வரை போடவும்.
பின்பு, இதை உங்கள் வீட்டின் வடகிழக்குப் பகுதியில் சற்று உயரமான இடத்தில் வைக்கவும்.
மாதம் ஒருமுறை இதை மாற்றி பழையதை மொட்டை மாடியில் ஒரு தட்டில் பறவைகளுக்கு உணவாக வைத்து விடவும்.
பிறகு மறுபடியும் புதிதாக நவதானியம் வாங்கி அந்த சிறிய மண் பானையில் வைக்கவும்.
தொடர்ந்து 2 மாதங்களுக்கு செய்து வர பண வரவில் முன்னேற்றம் ஏற்பட்டு கடன் தீர ஆரம்பிக்கும்.