Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வழுக்கையான தலையில் முடி முளைக்க செலவு இல்லாத சிம்பிள் டிப்ஸ்!! இன்னைக்கே ஸ்டார்ட் பண்ணுங்க!!

முடி உதிர்வு பிரச்சனை பலருக்கும் ஏற்படுகிறது.தலை சூடு,வயது,இரசாயன பொருட்களின் பயன்பாடு போன்ற காரணங்களால் முடி உதிர்வு அதிகமாகி கொண்டே செல்கிறது.சிலர் முடி உதிர்வை கட்டுப்படுத்த மொட்டை அடித்துக் கொள்கின்றனர்.இப்படி மொட்டை அடித்தவர்கள் வெற்றிலை எண்ணையை தலைக்கு தடவி வந்தால் முடி அடர்த்தியாக வளரும்.

தேவையான பொருட்கள்:-

1)வெற்றிலை – இரண்டு
2)தேங்காய் எண்ணெய் – 200 மில்லி
3)சின்ன வெங்காயம் – இரண்டு

செய்முறை விளக்கம்:-

நீங்கள் முதலில் இரண்டு வெற்றிலை எடுத்துக் கொள்ள வேண்டும்.அதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அடுப்பில் பாத்திரம் வைத்து 200 மில்லி தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.அதன் பின்னர் நறுக்கி வைத்துள்ள வெற்றிலை போட்டு குறைந்த தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.

அடுத்து அதில் இரண்டு அல்லது மூன்று சின்ன வெங்காயத்தை இடித்து போட்டு நிறம் மாறும் வரை காய்ச்சி அடுப்பை அணைக்க வேண்டும்.இந்த எண்ணெயை நன்றாக ஆறவைத்து ஒரு பாட்டிலுக்கு வடிகட்டி தலைக்கு தடவி வந்தால் முடி வளர்ச்சி நன்றாக இருக்கும்.

மொட்டை அடித்தவர்கள் இந்த எண்ணையை தடவி வந்தால் முடி வளர்ச்சி அபாரமாக இருக்கும்.முடி உதிர்தல்,தலை சூடு பிரச்சனை இருப்பவர்கள் இந்த வெற்றிலை எண்ணையை தலைக்கு தடவினால் நல்ல ரிசல்ட் கிடைக்கும்.

தேவையான பொருட்கள்:-

1)கறிவேப்பிலை – நான்கு கொத்து
2)தேங்காய் எண்ணெய் – அரை லிட்டர்

செய்முறை விளக்கம்:-

ஈரமில்லாத பாத்திரத்தில் அரை லிட்டர் தேங்காய் எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைத்து சூடாக்க வேண்டும்.பிறகு அதில் நான்கு கொத்து கறிவேப்பிலை போட்டு குறைந்த தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.

இந்த கறிவேப்பிலை எண்ணையை நன்றாக ஆறவைத்து வடிகட்டி தலைக்கு தடவி வந்தால் முடி வளர்ச்சி அதிகரிக்கும்.

Exit mobile version