செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைக்க எளிமையான வழி!!! அண்ணாமலை அவர்கள் கருத்து!!!

0
94
#image_title

செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைக்க எளிமையான வழி!!! அண்ணாமலை அவர்கள் கருத்து!!!

அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களுக்கு ஜாமின் கிடைக்க வேண்டும் என்றால் இது தான் ஒரே வழி என்று ஒரு வழிமுறையை பற்றி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

திருப்பூர் மாவட்டத்தில் கள்ளக்கிணறு பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் கிளை நிர்வாகி மோகன் ராஜ் அவர்களும் அவருடைய தாயார், சித்தி, பெரியப்பா ஆகிய நான்கு பேரும் கடந்த செப்டம்பர் மாதம் 3ம் தேதி வெட்டி படுகொலை செய்யப்பட்டனர்.

வீட்டின் அருகே அமர்ந்து மது அருந்திய தட்டிக் கேட்டதற்கு இவர்கள் நான்கு பேரையும் வெட்டி கொலை செய்துள்ளனர். இந்த சம்பவம் திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் பல்லடத்தில் என் மண் என் மக்கள் யாத்திரையை பல்லடத்தில் மேற்கொண்டார்.

அப்பொழுது படுகொலை செய்யப்பட்ட 4 பேரின் குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் கொலை செய்யப்பட்ட மோகன்ராஜ் என்பவரின் மகன் பிரணவ் அவர்களின் கல்வி செலவு முழுவதையும் பாஜக ஏற்றுக் கொள்ளும் என்று அறிவித்தார்.

அதன் பின்னர் நிருபர்களை சந்தித்த பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் “தமிழகத்தில் மது காரணமாக நடைபெறும் சமூக விரோத செயல்களுக்கு இங்கு நடைபெற்ற இந்த 4 பேரின் கலைகளை சாட்சி ஆகும். மது அருந்திவிட்டு மிருகமாக மாறியவர்களின் வெறிச்செயலால் இங்கு நான்கு பேரின் குடும்பங்கள் நிம்மதியை தொலைத்துள்ளது.

சமூக விரோதிகளையும், குற்றப் பின்னணியில் இருப்பவர்களையும் காவல்துறை கண்காணிக்க தவறிவிட்டது. தமிழகத்தில் உளவுத்துறை உள்ளதா என்பது குறித்து சந்தேகம் ஏற்படுகின்றது. தமிழ்நாட்டில் மதுவை விற்பனை செய்து இளைஞர்கள் அனைவரையும் கொலைகாரராக மாற்றி வைத்துள்ளனர்” என்று கூறினார்.

மேலும் செந்தில் பாலாஜி ஜாமீன் குறித்து அண்ணாமலை அவர்கள் “ஊழல் வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களை காவல்துறை கைது செய்துள்ளது. பல முறை ஜாமின் மனு அளித்தும் ரத்து செய்யப்பட்டது. அதற்கு காரணம் செந்தில் பாலாஜி அவர்கள் இன்னும் அமைச்சராக இருப்பது தான்.

எனவே அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களுக்கு ஜாமின் கிடைக்க வேண்டும் என்றால் அவருக்கு அமைச்சர் பதவியை நீக்க வேண்டும். அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜி அவர்களை நீக்கினால் அவருக்கு ஜாமின் கிடைக்கும்” என்று கூறினார்.