நாள்பட்ட தேமல் மறைய சிம்பிள் வழிகள்!
தோல் அலர்ஜி நோய்களில் ஒன்றான தேமல் ஊட்டச்சத்து குறைபாடு, மோசமான உணவுமுறை பழக்கம் உள்ளிட்டவைகளால் ஏற்படுகிறது.
இந்த தேமல் பாதிப்பை குணமாக்க இயற்கை வழிகளை அவசியம் பின்பற்றுவது நல்லது.
தீர்வு 01:-
நல்லெண்ணையில் மஞ்சள் சிறிதளவு சேர்த்து காய்ச்சி தேமல் குறையும்.
தீர்வு 02:-
வெற்றிலை, துளசி இலை சம அளவு எடுத்து அரைத்து மஞ்சள் கலந்து தேமல் மீது பூசினால் அவை விரைவில் குணமாகும்.
தீர்வு 03:-
அருகம்புல்லை அரைத்து மஞ்சள் கலந்து தேமல் மீது பூசினால் அவை விரைவில் குணமாகும்.
தீர்வு 04:-
எலுமிச்சை தோலை அரைத்து தேமல் மீது பூசி குளித்து வந்தால் அவை விரைவில் குணமாகும்.
தீர்வு 05:-
ஆரஞ்சு தோலை உலர்த்தி பொடியாக்கி தேமல் மீது பூசி குளித்து வந்தால் அவை விரைவில் குணமாகும்.
தீர்வு 06:-
நாயுருவி இலையை அரைத்து தேமல் மீது பூசி சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால் தேமல் மறையும்.
தீர்வு 07:-
பூண்டு மற்றும் வெற்றிலையை அரைத்து தேமல் மீது பூசினால் விரைவில் பலன் கிடைக்கும்.
தீர்வு 08:-
சீமை அகத்தி இலையை அரைத்து தேமல் மீது பூசி வரலாம். பாகற்காய், சுண்டைக்காய் உள்ளிட்டவற்றை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.