Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

உங்கள் வீட்டில் பணம் சேர்ந்து கொண்டே இருக்க எளிய வழிகள்!!

#image_title

உங்கள் வீட்டில் பணம் சேர்ந்து கொண்டே இருக்க எளிய வழிகள்!!

தீர்வு 1:

அஞ்சறைப் பெட்டியில் கண்டிப்பாக ஏதாவது ஓர் ரூபாய் தாளை மறைத்து வைத்து சேமித்துக் கொண்டே வர வேண்டும்.

முக்கியமாக நட்சத்திர சோம்பு உள்ள டப்பாவில் பணத்தை சேமித்து கொண்டே வரவும்.

அது மட்டும் அல்லாமல் நட்சத்திர சோம்பை பணம் வைக்கும் இடத்தில், பர்ஸில், ஹாண்ட் பாகில் போட்டு வைத்து மாதம் ஒருமுறை மாற்றவும்.

பழையதை கால் படாத இடத்தில் போட்டு விடவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வர நிச்சயம் பண வரவு அதிகமாகும்.

தீர்வு 2:

வெள்ளிக் கிழமையில் காலை 6 முதல் மணிக்குள் இதை செய்யவும். கோமதி சக்கரம் 11 வாங்கி முதலில் பாலில் சுத்தம் செய்து அடுத்து பன்னீர், அடுத்து மஞ்சள் தண்ணீரில் சுத்தம் செய்து துடைத்து வைத்துக் கொள்ளவும்.

பின்பு அவற்றிற்கு சந்தனம், குங்குமம் வைத்து அதை ஒரு பித்தளை அல்லது செம்புத் தட்டில் ஒவ்வொன்றாக வைத்து வட்ட வடிவில் வைக்கவும்.

முடிந்தவர்கள் ஒரு சிறிய சிவப்பு துணியை தட்டின் மீது வைத்து அதன் மீது சக்கரங்களை வைக்கவும். அதன் மீது பூக்கள் வைத்து அலங்கரித்து தூப தீப ஆராதனை செய்து வழிபடவும்.

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இதை பன்னீர் ஊற்றி சுத்தம் செய்து இதே போல் வழிபடவும். இவ்வாறு தொடர்ந்து 2 மாதங்களுக்கு செய்து வர பண வரவு நன்றாக இருக்கும்.

தீர்வு 3:

செல்வம் நிறைந்து இருக்க சமையல் அறையில் உப்பு ஜாடியை உங்கள் அடுப்பின் வலது பக்கத்தில் இருக்குமாறு வையுங்கள்.

உப்பு ஜாடியும் எண்ணெய் ஜாடியும் பக்கத்தில் பக்கத்தில் வைக்காதீர்கள். வெள்ளிக்கிழமை காலை 6 முதல் 7 மணிக்குள் உப்பு ஜாடியைத் தவறாமல் நிரப்பி வையுங்கள்.

நாம் அன்ன பூரனிக்கு மரியாதை செலுத்தும் வகையில் தினமும் குனிந்து அரசி எடுக்கும் வகையில் அரிசி பாத்திரத்தை கீழ் ஷெல்பில் வைக்கவும்.

இப்படி செய்து பாருங்கள். 2 மாதங்களில் பண வரவில் முன்னேற்றம் இருக்கும்.

Exit mobile version