தமிழக போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் விடுமுறை எடுத்துக் கொள்ள ஒரு புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இதில் ஒரு குறிப்பிட்ட தகுதிகளை பூர்த்தி செய்தால், விடுமுறை தானாகவே வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது போக்குவரத்து துறை ஊழியர்களிடம் மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது.
மாநகர் போக்குவரத்துக் கழக பணியாளர் செயலி (MTC Staff Mobile App) 29.02.2024 முதல் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் போக்குவரத்து ஊழியர்கள் விடுமுறை கேட்டு காத்திருக்க வேண்டிய தேவையில்லை. மேலும் இதன் மூலம் எளிமையான முறையில் விரைவாக விடுமுறை விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த செயலியை அனைத்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் பயன்படுத்தி வரும் நிலையில், தற்போது இதன் அப்டேட் வெர்ஷன் ஆக, ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு விடுப்பு வழங்குவதை எளிதாக்கிட. AUTO APPROVAL முறை மூலம் விடுப்பு வழங்கும் வசதி 01.11.2024 முதல் இச்செயலியில் அறிமுகப்படுத்தப்படுகிறது.
இதில், ஆட்டோ அப்ரூவல் மூலம் விடுப்பு பெற முக்கிய தகுதிகளாக கூறப்பட்டுள்ளவை, விடுப்பு எடுக்கும் மாதத்திற்கு முந்தைய மாதத்தில் கண்டிப்பாக 24 நாட்கள் வேலை பார்த்திருக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் பணிபுரிந்து இருந்தால் ஆட்டோ அப்ரூவல் மூலம் உடனடியாக விடுமுறை கிடைத்து விடும் என்றும் கூறப்படுகிறது.மேலும் முதலில் விண்ணப்பிப்பவர்களுக்கு முதலில் முன்னுரிமை வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.