Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சிங்கப்பூர் டூ மதுரை விமான சேவை! தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைத்த உள்துறை மந்திரி!!

#image_title

சிங்கப்பூர் டூ மதுரை விமான சேவை! தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைத்த உள்துறை மந்திரி!
சிங்கப்பூரில் இருந்து மதுரைக்கு நேரடி விமான சேவை தொடங்க வேண்டும் என்று சிங்கப்பூர் உள்துறை மந்திரி அவர்கள் தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் அவர்களிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
புதிய முதலீடுகளை ஈர்க்கவும் புதிய தொழில்நுட்பங்களை கொண்டு வரவும் அரசு முறை பயணமாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் சென்றுள்ளார் தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் சிங்கப்பூரில் நேற்று(மே 24ம் தேதி) நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டார்.
முதல்வர் முக. ஸ்டாலின் அவர்களின் முன்னிலையில் 6 புதிய ஒப்பந்தங்கள் போடப்பட்டது. இதையடுத்து தமிழக முதல்வர் முக. ஸ்டாலின் அவர்கள் சிங்கப்பூர் உள்துறை மந்திரி சண்முகம் அவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையின் பொழுது இணைய பாதுகாப்பு கட்டமைப்பை மேம்படுத்துதல் பற்றி பேச்சு வார்த்தை நடத்தினார்.
தொடர்ந்து நிகழ்ந்த கலந்துரையாடலில் சிங்கப்பூர் உள்துறை மந்திரி சண்முகம் அவர்கள் தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் அவர்களிடம் சிங்கப்பூரில் இருந்து மதுரைக்கு நேரடி விமான சேவை தொடங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் இதை பற்றி மத்திய அரசிடம் பேசப்படும் என்று கூறி தமிழ்நாட்டில் நடக்கவுள்ள முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு கலந்து கொள்ளுமாறு உள்துறை மந்திரி சண்முகம் அவர்களை அழைத்தார். சிங்கப்பூர் பயணத்தை நிறைவு செய்து இன்று தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் ஜப்பான் செல்லவுள்ளார்.
Exit mobile version