Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

“கங்குவா” நெகடிவ் ரெவிஎவ்  ஆச்சரியமளிக்கிறது !! ஜோதிகாவை  ஆபாசமாக திட்டிய பாடகி  சுசித்ரா!!

Singer Suchitra lashed out at Jyothika's negative review of Ganguwa with obscenity

Singer Suchitra lashed out at Jyothika's negative review of Ganguwa with obscenity

Singer Suchitra:கங்குவா திரைப்படத்திற்கு எதிர்மறை விமர்சனம் குறித்து ஜோதிகா வெளியிட்ட பதிவுக்கு பாடகி சுசித்ரா  ஆபாச வார்த்தைகளால் திட்டி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

சூர்யா நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் கடந்த  நவம்பர்-14ஆம் தேதி வெளியான படம் தான் கங்குவா. இப்படம் கற்பனை  (fantasy) கதை வடிவத்தில் எடுக்கப்பட்ட படம் ஆகும். இதில் நடிகர் சூர்யா மற்றும் பாபி தியோல், திஷா பதானி உள்ளிட்ட பல திரைப் பிரபலங்கள் நடித்து இருப்பார்கள். இந்த படத்திற்கு ரசிகர்கள் பொதுமக்கள் என பலரும் எதிர்மறையான விமர்சனங்களை கொடுத்து இருந்தார்கள்.

கங்குவா படத்தில் சவுண்ட் எபெக்ட்ஸ் அதிகமாக உள்ளது என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனால் படக்குழு தியேட்டர்களில் சவுண்ட் கம்மியாக வைத்துக் கொள்ள கூறினார்கள். இப் படத்திற்கு ஆதரவாக பலர் தங்களது கருத்துக்களை தெரிவித்து வந்தர்கள்.மேலும் இப்படம் தொடர்பான சூர்யாவின் மனைவி ஜோதிகா பதிவு ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டு இருந்தார்.
அதில் கங்குவா திரைப்படத்திற்கு வரக்கூடிய விமர்சனங்களை பார்க்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது. என்றும்  மூன்று மணி நேர படத்தில் முதல் அரை மணி நேரம் மட்டுமே இரைச்சலாக இருக்கிறது. எது பொதுவாக இந்திய திரைப்படங்களில் வரக்கூடிய பிரச்சனைகள் தான் என்றும் கூறினார். மேலும் கங்குவா திரைப்படத்தில் இடம்பெற்ற நல்ல கருத்துக்கள், பெண்கள் சண்டை காட்சிகள்,படத்தின்  3D உருவாக்கம் பற்றி யாரும் பேசவில்லை என கருத்தை அந்த பதிவில் தெரிவித்து இருந்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பாடகி சுசித்ரா  வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் நடிகை ஜோதிகாவை அருவருக்கத்தக்க வார்த்தைகளால் ஆபாசமாக பேசி இருக்கிறார்.  இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Exit mobile version