சைனஸ்? இதை குணமாக்க உதவும் “அதிமதுரம் + ஆடாதோடை”! எவ்வாறு பயன்படுத்துவது?
சைனஸ் என்பது ஒருவித அலர்ஜி பாதிப்பு ஆகும். சைனஸ் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பாதிக்கும் நோயாக இருக்கின்றது. இந்த பாதிப்பு பெரும்பாலும் அசுத்தமான காற்றை சுவாசிப்பதால் ஏற்படக் கூடிய ஒன்றாக இருக்கின்றது.
அதுமட்டும் இன்றி குளிர்ந்த பானம், குளிர்ந்த பொருட்களை சாப்பிடுவதினாலும் உண்டாகிறது. முகத்தில் அதிகப்படியான வலி ஏற்படுதல், நாள்பட்ட கெட்டி சளி, சுவாசித்தலில் பிரச்சனை போன்றவை சைனஸின் அறிகுறிகள் ஆகும்.
சைனஸ் பாதிப்பை குணமாக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள பாட்டி வைத்தியத்தை பின்பற்றவும்.
தேவையான பொருட்கள்:-
1)அதிமதுரம்
2)ஆடாதோடை
3)திப்பிலி
செய்முறை:-
அதிமதுரம், ஆடாதோடை, திப்பிலி ஆகியவற்றை சம அளவு எடுத்து பொடியாக்கி ஒரு டப்பாவில் சேமித்து வைத்துக் கொள்ளவும்.
அடுத்து அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும். தண்ணீர் சூடானதும் அரைத்த மூலிகை பொடி சிறிதளவு போட்டு கொதிக்க விடவும்.
பிறகு அடுப்பை அணைத்து விட்டு இதை ஒரு கிளாஸுக்கு வடிகட்டி குடிக்கவும். இந்த மூலிகை பானம் சைனஸ் பாதிப்பை முழுமையாக குணமாக்கும்.