Sinus remedy in tamil: பலருக்கும் இந்த பிரச்சனை இருக்கும். தலைக்குளித்தால் உடனே தலை வலி வந்து முன்நெற்றி, பின் பகுதி எல்லாம் வலிக்கும். மேலும் தலையை கீழே குனிந்தால் தலை பாரமாக இருக்கும். மேலும் பின் கழுத்து வலி இருக்கும். முகத்தில் மூக்கு பகுதி, கண்ணம் போன்ற இடங்களில் வலிக்கும். இந்த பிரச்சனையை தான் நாம் சைனஸ் என்று கூறுகிறோம். தலையில் நீர் கோர்பதினால் இந்த தலைபாரம் (sinus problem treatment in tamil) வருகிறது.
ஒரு சிலர் தலை குளித்துவிட்டு சரியாக உலர வைக்கமால் இருப்பது, அல்லது மழையில் நனைந்தாலோ, பனியினால், வியர்வையினால் தலையில் அதிகமாக வியர்த்து போய் தலை பாரமாக இருக்கும். இந்த பிரச்சனை வந்துவிட்டால் போதும் ஒரு வேளையும் நம்மால் ஒழுங்காக பார்க்க முடியாது.
நாம் இந்த பதிவில் தலை பாரத்தை குறைக்க சிறந்த வழிமுறைகளை பார்க்கலாம்.
தலை பாரத்தை குறைக்க வைத்தியம்
தலை பாரத்தை குறைக்க (thalai param remedy in tamil ) சிறந்த வைத்தியம் என்றால் அது ஆவி பிடிப்பது தான். தண்ணீரை கொதிக்க வைத்து ஆவி பிடிக்க வேண்டும். இதனால் தலை, நெற்றி, முகத்தில் உள்ள நீர் வெளியேறி விடும்.
பிறகு தூங்கும் போது தலையணைக்கு பதிலாக அரிசியை ஒரு துணியில் அல்லது சணல் சாக்கில் கட்டி தலைக்கு வைத்து படுத்தால் தலையில் உள்ள நீர் குறைந்து விடும்.
மேலும் நொச்சி இலை தலையில் உள்ள நீரை வெளியேற்றுவதற்கு சிறந்த நிவாரணி. நொச்சி இலைகளை பறித்து வந்து. அதனை தலையணையாக செய்து வைத்துக்கொள்ளலாம். எப்பொழுது எல்லாம் தலை பாரமாக உள்ளதோ அப்போது எல்லாம் நீங்கள் இதனை தலைக்கு வைத்து பயன்படுத்தலாம். இதனால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.
மேலும் சிறதளவு கிராம்பை கடாயில் போட்டு வருத்து, அதனை பொடி செய்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து நெற்றியில் பத்து போட்டு வந்தால் நெற்றியில் உள்ள நீர் இறங்கி விடும்.
நொச்சி இலை, நுணா இலை, வேப்ப இலை, துளசி, பச்சை கற்பூரம் போட்டு தண்ணீரில் காெதிக்க வைத்து ஆவி பிடிக்க விரைவில் தீர்வு கிடைக்கும். மேலும் அந்த நீரை வெதுவெதுப்பாக உள்ள போது தலையில் தேய்தால் தலையில் உள்ள தண்ணீர் இறங்கிவிடும். நொச்சி நீரை தலைபாரம் உள்ள போது மட்டும் தான் தலையில் தேய்த்துக்கொள்ள வேண்டும்.
மேலும் சுக்கு பாெடியை சிறிது தண்ணீர் சேர்த்து நெற்றில் பத்து போட்டு வரலாம்.
மேலும் படிக்க: இனி காலையில் இந்த blue tea குடியுங்கள்..!! உடல் எடை குறைய, முகம் பளபளக்க, சர்கரை நோய்.. அனைத்திற்கும் ஒரே தீர்வு