Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நாள்பட்ட மார்பு சளி நிமிடத்தில் கரைந்து வெளியேற இதை 1 கிளாஸ் பருகுங்கள்!!

#image_title

நாள்பட்ட மார்பு சளி நிமிடத்தில் கரைந்து வெளியேற இதை 1 கிளாஸ் பருகுங்கள்!!

சாதாரண சளி நாளடைவில் மார்பு சளியாக உருவெடுத்து விடுகிறது. இந்த மார்பு சளி பாதிப்பை ஆரம்ப நிலையில் கண்டறிந்து குண்டப்படுத்தி விடுவது நல்லது. இதை இயற்கை முறையில் வீட்டில் இருக்கும் பொருட்களை பயன்படுத்தி எளிமையாக குணப்படுத்திவிட முடியும்.

மார்பு சளிக்கான அறிகுறிகள்:-

அதிக சளி, வறட்டு இருமல், தலைபாரம், நெஞ்சு எரிச்சல், தொண்டை எரிச்சல், சளி அடர் மஞ்சள் நிறத்தில் காணப்படுதல், சளியில் ரத்தம் கலந்து வெளியேறுதல்.

தேவையான பொருட்கள்:-

*கொத்தமல்லி விதை

*இஞ்சி

*மிளகு

*துளசி

*புதினா

*தேன்

செய்முறை…

உரலில் 1 தேக்கரண்டி கொத்தமல்லி விதை சேர்த்து இடித்துக் கொள்ளவும். பின்னர் 6 மிளகு சேர்த்து இடித்து பொடி செய்து கொள்ளவும்.

பிறகு சிறு துண்டு இஞ்சியை தோல் நீக்கி உரலில் போட்டு இடித்துக் கொள்ளவும்.

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 1/4 கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். அவை சூடானதும் இடித்த இஞ்சி, கொத்தமல்லி விதை, மிளகு உள்ளிட்டவற்றை சேர்க்கவும்.

அடுத்து 20 துளசி இலை மற்றும் 5 புதினா இலையை சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.

இதை ஒரு டம்ளருக்கு வடிகட்டி தேன் கலந்து பருகினால் மார்பில் தேங்கி கிடந்த நாள்பட்ட சளி முழுவதும் கரைந்து மலம் மூலம் வெளியேறி விடும்.

Exit mobile version