இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்துகொள்ள இந்த பானங்களை பருகுங்கள் போதும்!!

0
92
#image_title

இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்துகொள்ள இந்த பானங்களை பருகுங்கள் போதும்!!

இன்றைய காலத்தில் பெரும்பாலானோர் சர்க்கரை நோய் பாதிப்பால் அவதிப்பட்டு வருகின்றனர். ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, பரம்பரை வியாதி என்று சர்க்கரை நோய் உருவாகிறது.

இதற்காக நாம் அதிகளவு மாத்திரைகளை உண்டு வருகிறோம். இதனால் உடல் ஆரோக்கியம் அதிகம் பாதிக்கப்படும். மாத்திரையே உணவு என்ற நிலை உருவாகி விடும். இதனால் சில இயற்கை வழிகளை பின்பற்றினாலும் சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.

அந்த வகையில் சர்க்கரை நோய் பாதிப்பு இருப்பவர்கள் கற்றாழை சாறு மற்றும் வெந்தயத் தேநீர் செய்து பருகி வருவதன் மூலம் அந்த பாதிப்பை கட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியும்.

கற்றாழை ஜூஸ்:-

கற்றாழை ஜூஸ் உடலிலுள்ள பல்வேறு நோய்களுக்கு மருந்தாக இருக்கிறது. தினமும் காலை வேளையில் வெறும் வயிற்றில் இந்த மருத்துவ குணம் கொண்ட கற்றாழை ஜூஸை குடித்து வந்தோம் எனறால் உடலில் இருக்கின்ற தேவையற்ற நச்சு கழிவுகள் மலம் வழியாக வெளியேறி உடல் வலுவாகும்.

மேலும் மெட்டபாலிசத்தை அதிகரித்து உடல் எடையை எந்த ஒரு சிரமும் இல்லாமல் குறைக்க வைக்கும் இந்த பானம் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ள பெரிதும் உதவுகிறது. அதுமட்டும் இன்றி பெண்களின் மாதவிடாய் கோளாறு, மலச்சிக்கல், உடல் உஷ்ணம், வயிற்று கோளாறு உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளை சரி செய்யும் தன்மை கொண்டது.

தேவையான பொருட்கள்:

கற்றாழை – 5 துண்டுகள்

இஞ்சி – சிறு துண்டு

எலுமிச்சை சாறு – 2 தேக்கரண்டி

செய்முறை:-

முதலில் கற்றாழையை தோல் நீக்கி அதில் உள்ள ஜெல்லை ஒரு பவுல் சேர்த்து கொள்ள வேண்டும்.பிறகு 3 முதல் 4 தடவை அவற்றை நன்கு அலசி எடுத்து கொள்ள வேண்டும்.

பின்னர் மிக்ஸி ஜாரில் கற்றாழை ஜெல் சிறு துண்டு இஞ்சி மற்றும் எலுமிச்சை சாறு 2 தேக்கரண்டி சேர்த்து நன்கு அரைத்து கொள்ள வேண்டும்.

இவற்றை ஒரு டம்ளரில் வடிகட்டி தேவைப்பட்டால் தேன் சேர்த்து பருகலாம். சர்க்கரை நோயாளிகள் தேனை தவிர்ப்பது நல்லது.

வெந்தயத் தேநீர்:-

இதில் அதிகளவு வைட்டமின் சி, புரதம், நார்ச்சத்து, மாங்கனீசு, மெக்னீசியம், இரும்புச்சத்து உள்ளிட்டவை நிறைந்துள்ளது. இதில் தேநீர் செய்து பருகினால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். இந்த வெந்தயத்தில் உள்ள பொட்டாசியம் இரத்த ஓட்டத்தை சீராக வைத்திருக்க பெரிதும் உதவுகிறது. அதேபோல் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ள பெரிதும் உதவுகிறது.

தேவையான பொருட்கள்:-

*வெந்தயம் – 1 தேக்கரண்டி

*எலுமிச்சை சாறு – சிறிதளவு

செய்முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம்’வைத்து அதில் 1 1/2 கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். அவை சூடேறியதும் அதில் 1 தேக்கரண்டி வெந்தயம் சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விடவும். 1 1/2 கிளாஸ் தண்ணீர் 1 கிளாஸ் என்று வரும் வரை விட்டு அடுப்பை அணைக்கவும்.

பின்னர் இதை ஒரு டம்ளருக்கு வடிகட்டி சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்து பருகவும்.