Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

எப்பேர்ப்பட்ட பித்தத்தையும் நிமிடத்தில் கட்டுப்பட வைக்க நான்கு பொருட்கள் கொண்ட மூலிகை ட்ரிங்க் பருகுங்கள்!!

உடலில் பித்த அளவு அதிகமானால் கவலை கொள்ள வேண்டாம்.இதை வீட்டு வைத்தியம் மூலம் எளிதில் கட்டுப்படுத்திக் கொள்ளலாம்.

பித்த அறிகுறிகள்:

1)திடீர் மயக்கம்
2)உடல் சோர்வு
3)இளநரை
4)வாய் கசப்பு
5)செரிமானப் பிரச்சனை

பித்தத்தை முறியடிக்கும் மூலிகை பானம்:

அருவதா இலை பொடி 10 கிராம்
அதிமதுரப்பொடி 10 கிராம்
கிராம்பு பொடி 10 கிராம்
கருஞ்சீரகப் பொடி 10 கிராம்
பனங்கற்கண்டு 10 கிராம்

நாட்டு மருந்து கடையில் அருவதா இலை பொடி,அதிமதுரப் பொடி,கிராம்பு பொடி மற்றும் கருஞ்சீரகப் பொடி கிடைக்கும்.அனைத்தையும் சம அளவில் வாங்கிக் கொள்ள வேண்டும்.பொடியாக வாங்க விரும்பாதவர்கள் இந்த பொருட்கள் அனைத்தையும் வாங்கி தனி தனியாக அரைத்து வைத்து பயன்படுத்தலாம்.

முதலில் பாத்திரம் ஒன்றில் 200 மில்லி அளவிற்கு தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பிறகு 10 கிராம் அருவதா பொடியை அதில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து 10 கிராம் அளவிற்கு அதிமதுரப் பொடி மற்றும் 10 கிராம் அளவிற்கு கிராம்பு பொடி சேர்த்து மிதமான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.

பிறகு 10 கிராம் அளவிற்கு கருஞ்சீரகப் பொடியை அதில் போட்டு நன்றாக கொதிக்க வைத்து அடுப்பை அணைத்துவிட வேண்டும்.

பிறகு ஒரு டம்ளரை எடுத்து கொதிக்க வைத்த பானத்தை அதில் வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.இதன் பின்னர் ஒரு தேக்கரண்டி அளவு பனங்கற்கண்டை பானத்தில் போட்டு நன்கு மிக்ஸ் செய்து பருக வேண்டும்.

இந்த பானத்தை குடிப்பதால் உடலில் பித்த அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்.உடல் சூடு பிரச்சனை இருப்பவர்கள் இந்த பானத்தை தொடர்ந்து பருகி வந்தால் சூடு தணியும்.எந்த பருக காலத்திலும் இந்த பானம் பருகலாம்.

மற்றொரு தீர்வ:-

உலர் இஞ்சி பவுடர் – 10 கிராம்
வெல்லம் – ஒரு பீஸ்

முதலில் காய்ந்த இஞ்சியை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.கடையில் உலர் இஞ்சி பவுடர் கிடைக்கும் அதை வாங்கி பயன்படுத்தலாம்.

இப்பொழுது பாத்திரம் ஒன்றை எடுத்து உலர் இஞ்சி பொடி 10 கிராம் அளவிற்கு அதில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

பிறகு ஒரு பீஸ் வெல்லத்தை இடித்து அதில் போட்டுக் கொள்ளுங்கள்.பின்னர் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க வையுங்கள்.இந்த பானத்தை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி பருகி வந்தால் உடலில் பித்த அளவு கட்டுக்குள் இருக்கும்.சீரகத்தை மென்று சாப்பிட்டாலும் பித்தம் குறையும்.

Exit mobile version