அய்யயோ பப்பாளி பழம் சாப்பிடுவதால் உடலுக்கு இவ்வளவு தீமைகள் ஏற்படுமா? மக்களே உஷார்
அதிக சத்துக்கள் அடங்கிய விலை மலிவான பழங்களில் ஒன்று பப்பாளி.இந்த பப்பாளி பழத்தில் நார்சத்து,வைட்டமின் சி,பி,ஏ,கால்சியம்,கரோட்டின் உள்ளிட்ட சத்துக்கள் அதிகளவில் அடங்கி இருக்கிறது.இந்த பழம் மலச்சிக்கல்,செரிமான பிரச்சனை உள்ளிட்டவற்றை சரி செய்யும் தன்மை கொண்டது.அதேபோல் குழந்தைகளுக்கு பாலூட்டும் தாய்மார்கள் பப்பாளி பழம் சாப்பிட்டால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.அதேபோல் சரும பிரச்சனைகளுக்கும் பப்பாளி உரிய தீர்வாக இருக்கும்.இப்படி பல நன்மைகளை கொண்ட பப்பாளி பழத்தில் சில தீமைகளும் இருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? பப்பாளி பழம் உண்பதால் ஒரு சிலர் பாதிப்புகளை சாதிக்க நேரிடும்.
பப்பாளி பழம் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் தீமைகள்:-
*கர்ப்பம் தரித்த பெண்கள் பப்பாளி பழம் உண்ணக்கூடாது.காரணம் பப்பாளியில் உள்ள லேடெக்ஸ் கருவை கலைக்கும் அபாயத்தை கொண்டிருக்கிறது.
*இதய துடிப்பு கட்டுப்பாடில்லாமல் இருந்தால் பப்பாளி பழத்தை உண்பதை அறவே தவிர்க்க வேண்டும்.காரணம் பப்பாளியில் சயனோஜெனிக் கிளைகோசைட் அமினோ அமிலம் உள்ளது.இவை இதயத் துடிப்பு கட்டுப்பாடில்லாமல் இருந்தால் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பழமாக மாறிவிடும்.
*பப்பாளி பழம் ருசியாக இருக்கிறது என்று அதிகம் சாப்பிட்டோம் என்றால் உடல் வயிற்று வலி,வயிற்று போக்கு ஆகியவை ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கிறது.
*அதேபோல் அளவுக்கு மீறி பப்பாளி பழத்தை ருசி பார்த்தால் குடல் சார்ந்த பாதிப்பு,வயிறு எரிச்சல்,இரைப்பை பாதிப்பு மற்றும் செரிமான பிரச்சனையை நாம் சந்திக்க நேரிடும்.
*உங்களில் பெரும்பாலானோருக்கு அலர்ஜி பாதிப்பு இருக்கும்.அவர்கள் பப்பாளி பழம் சாப்பிடுவதை அறவே தவிர்க்க வேண்டும்.காரணம் பப்பாளியில் சிட்டினேஸ் என்சைம் உள்ளது. அலர்ஜி இருப்பவர்கள் இதை சாப்பிட்டால் கண்களில் இருந்து நீர் வடிதல்,தும்மல்,சுவாசப் பிரச்சனை,இருமல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
*கிட்னி ஸ்டோன் பாதிப்பதால் அவதிப்பட்டு வரும் நபர்கள் பப்பாளி பழம் அதிகம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.காரணம் பப்பாளி பழத்தை அதிகளவு உண்ணும் பொழுது மனித உடலில் உள்ள கால்சியம் ஆக்சலேட்டின் அளவு உயரும்.இதனால் சிறுநீரக கற்களின் அளவு அதிகரிக்கும் அபாயம் ஏற்படும்.