ஐயா என் பேனாவை காணோம்! காவல் நிலையத்தில் புகார் அளித்த அரசியல் பிரபலம்!

0
149

சென்ற 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற பொது தேர்தலின் போது கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக களம் கண்டு வெற்றி பெற்றவர் வசந்த் அண்ட் கோ உரிமையாளர் எச் வசந்தகுமார் அவர்களின் மூத்த மகன் விஜய் வசந்த்.

இவர் சில தமிழ் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார், தற்போதைய இவர் வசந்த்&கோவின் நிர்வாக இயக்குனராக செயல்பட்டு வருகிறார்.

இவருடைய தந்தையான வசந்தகுமார் கடந்த 1978 ஆம் வருடத்தில் வசந்த் & கோ என்ற நிறுவனத்தை தொடங்கினார்.

அந்த நிறுவனம் தற்போது தமிழகம், புதுவை கேரளா ஆந்திரா மற்றும் கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் 71 கிளையுடன் திகழ்ந்து வருகிறது.

இந்த நிறுவனம் கடந்த 2016 ஆம் வருடத்தில் 1000 கோடி ரூபாய் என்ற அளவிற்கு விற்பனை செய்திருக்கிறது.

இந்த நிலையில், வசந்த் விலை உயர்ந்த 1.50 லட்சம் மதிப்புள்ள தங்க பேனா ஒன்று காணாமல் போய்விட்டதாக கிண்டி காவல் நிலையத்தில் புகார் வழங்கியிருக்கிறார்.