Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

Siru Pasalai Keerai: உலகிலேயே மிக சிறிய இலை தான்.. சிறு பசலை கீரையை பார்த்தால் விடாதீங்க..!! மருத்துவ பயன்கள் அதிகம்..!!

Siru pasalai keerai

Siru Pasalai Keerai: நம்மை சுற்றி எண்ணற்ற வகையிலான மருத்துவ மூலிகைகள் உள்ளன. ஆனால் இவையாவும் நமக்கு களைச் செடிகளாக தான் தெரியும். நமது தாத்தா, பாட்டி அவர்கள் சிறியவர்களாக இருக்கும் போது அவர்களின் பெற்றோர்கள் இதனை சமைத்து கொடுத்து வந்ததாகவும், இவர்களும் சமைத்து சாப்பிட்டு வளர்ந்திருப்பார்கள். ஆனால் இந்த நவீன காலத்தில் வேலைகள் தொடர்பாக நகரங்களுக்கு சென்று வாழும் போது இந்த வகை கீரைகளை (Siru Pasalai Keerai Benefits in tamil) நாம் பார்த்திருக்க கூட மாட்டோம்.

மேலும் கிராமங்களில் உள்ளவர்கள் இந்த சிறு பசலை கீரையை கட்டாயம் பார்த்திருப்பார்கள். ஆனால் இந்த வகை கீரைகளின் மருத்துவ குணம் அவ்வளவாக தெரியாமல் இருப்பார்கள். காரணம் இந்த வகை கீரைகளை யாரும் மற்ற கீரைகள் போல் வளர்த்து வருவதில்லை. மேலும் இந்த வகை கீரைகள் ஈரப்பதமான இடங்களில் முக்கியமாக வயல் வெளிகளில், தரையில் படர்ந்திருக்கும். பார்பதற்கு சிறு சிறு இலைகளை கொண்டிருக்கும். குறிப்பிட்ட இடங்களில் இதனை விற்பார்கள். இந்த கீரையை சிறு பசலை கீரை அல்லது தரை பசலை கீரை என்று அழைப்பார்கள். தரையில் அதிகமாக இவைகள் படர்ந்து காணப்படும். இந்த கீரையின் மருத்துவ பயன்கள் பற்றி இந்த பதிவில் (Tharai Pasalai Benefits in tamil) காண்போம்.

சிறு பசலை கீரையின் மருத்துவ பயன்கள்

பொதுவாக கீரைகள் உடல் சூட்டை தணிக்கும், உடம்புக்கு குளிர்ச்சியை கொடுக்க கூடியது. அந்த வகையில் சிறு பசலை கீரையும் வெயில் காலத்திற்கு ஏற்ற கீரையாகும். ஏனெனில் இந்த கீலை உடல் உஷ்ணத்தை குறைக்கும் கீரையாகும். உடலுக்கு குளிச்சியை கொடுக்கும்.

இந்த கீரை மலச்சிக்கலை நீக்குகிறது. அந்த கீரையை மலச்சிக்கல் உள்ளவர்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர மலச்சிக்கல் பிரச்சனை தீரும்.

சிறுநீர் தாெடர்பான பிரச்சனைகள் உள்ளவர்கள் இந்த கீரையை சமைத்து சாப்பிட்டு வர சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல் தொடர்பான அனைத்து பிரச்சனையும் நீங்கும்.

வயிற்றுப்புண்ணுக்கு இது சிறந்த மருந்ததாக உள்ளது. இந்த கீரையை கடல் செய்து அல்லது கூட்டு , சாம்பார் வைத்து சாப்பிட்டு வந்தால் வயிற்று, வாய் புண் சரியாகிவிடும்.

முக்கியமாக மாதவிடாயின் போது அதிக இரத்த போக்கு, அடிவயிற்று வலி, கர்ப்பப்பை போன்ற பிரச்சனைகளை சிறந்த தீர்வாகும்.

இந்த கீரையில் வைட்டமின் A மற்றும் இரும்பு சத்து அதிகமாக காணப்படுகிறது. மேலும் இந்த வகை கீரையில் கரிம அமிலங்கள் மற்றும் அமினோ அமிலங்கள் காணப்படுகிறது.

உடல் சூட்டினால் உண்டாக கூடிய மூலம் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கும்.

இந்த செடி கிடைத்தால் இதனை ஒரு தொட்டியில் வைத்து வளர்த்து வந்தால் அது படர்ந்து வளர தொடங்கும்.

இந்த கீரையை மற்ற கீரைகளை போன்று சமைத்து சாப்பிடலாம். பருப்பு சேர்த்து கூட்டு வைத்து சாப்பிடலாம்.

மேலும் படிக்க: கொழுப்பு கட்டி கரைந்து உடல் எடை குறைய வேண்டுமா? உயிர் கொடுக்கும் உயிர்வேலி கிளுவை..!!

Exit mobile version