Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்த பழத்தை எங்கு பார்த்தாலும் விடாதீங்க..!! மலச்சிக்கல் முதல் அனைத்து வயிற்று பிரச்சனைக்கும் தீர்வு..!!

Siru Poonaikali Palam

Siru Poonaikali Palam: பொதுவாக நம்மைச் சுற்றி பல அரிய வகை மூலிகைகள் உள்ளன. ஆனால் அதனை நாம் தினந்தோறும் ஏதோ களைச்செடிகள் என்று கண்டு கொள்ளாமல் போகிறோம். கிராமங்களில் வளர்ந்த பிள்ளைகளுக்கு ஓரளவிற்கு அவர்களை சுற்றியுள்ள செடி, கொடிகளின் மூலிகை பயன்கள் தெரிந்திருக்க வாய்ப்புள்ளது. ஏனென்றால் தாத்தா, பாட்டி, நமக்கு ஏதாவது காய்ச்சல், சளி, இருமல் வந்துவிட்டால் போதும் உடனே வயலுக்குச் சென்று ஏதோ ஒரு இலைகளை பறித்து வந்து கசாயம் வைத்தோ அல்லது கூட்டு செய்து நமக்கு கொடுப்பார்கள். அதனை சாப்பிட்டவுடன் நமக்கு வந்திருக்கும் நோய் உடனே போய்விடும்.

ஆனால் வளர்ந்து வரும் நவீன காலத்தில் நம்மைச் சுற்றியுள்ள செடி, கொடிகளின் மருத்துவ பயன்களை நாம் அறிந்து கொள்ளாமலே செல்கின்றோம். அந்த வகையில் சாலை ஓரங்களில் ஈரப்பதமான இடங்களில் முக்கியமாக மழைக்காலங்களில் இந்த சிறு பூனைக்காலி என்னும் கொடி படர்ந்து இருக்கும். அந்த கொடி பார்ப்பதற்கு அதன் இலை பூனையின் கால் தடம் போன்ற அமைப்பில் இருக்கும். அதன் காய் முட்டையாகவும், அதன் மேல் சிறு சிறு முடிகள் போன்று இருக்கும். இதன் பழம் மஞ்சள் நிறத்தில் இருக்கும். உள்ளே விதை கருப்பு நிறத்தில் சப்ஜா விதையை ஊற வைத்தால் எவ்வாறு இருக்குமோ அது போன்ற தோற்றத்தில் இருக்கும்.

இந்த பழத்தை (Stinking Passion Flower) ஒரு சில நபர்கள் சாப்பிட்டு இருப்பார்கள். மற்றவர்கள் இதன் மருத்துவப் பயன்கள் தெரியாமலேயே இருப்பார்கள். எனவே இந்த பழத்தைப் பார்த்தால் விடாதீர்கள். இதில் அவ்வளவு மருத்துவ பயன்கள் உள்ளன. வயிறு சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் இது தீர்வாக உள்ளது. நாம் இந்த பதிவில் சிறு பூனை காலியின் மருத்துவ பயன்களை (siru poonaikali Payangal in tamil) பார்க்கலாம்.

சிறு பூனைக்காலி பயன்கள்

பூனைக்காலி வேறு, சிறு பூனைக்காலி என்பது வேறு இரண்டும் ஒன்று அல்ல. மேலும் இந்த செடிக்கு பல்வேறு பெயர்கள் வைத்து வெவ்வேறு பகுதிகளில் அழைக்கிறார்கள்.

பறவைகளுக்கு இந்த பழம் மிகவும் பிடிக்கும். இதன் இலைகளை பறித்து வந்து கசாயம் வைத்தோ அல்லது சமைத்து சாப்பிட்டால் மலச்சிக்கல் குணமாகிவிடும்.

உள்ளே இருக்கும் விதை போன்ற சதையை சாப்பிட்டு வந்தால் நீண்ட நாள் மலச்சிக்கல் குணமாகிவிடும்.

மேலும் செரிமான பிரச்சனை, வயிற்று உப்புசம், வாந்தி போன்ற பிரச்சனைக்கு சிறந்த தீர்வாக உள்ளது.

இதன் இலையை கசாயம் வைத்து குடித்தால் வயிற்று வலி, வாயு பிரச்சனை, அஜீரணக்கோளாறு, ஆஸ்துமா குணமாகும்.

மேலும் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சனை, கர்ப்பப்பை சம்பந்தமான பிரச்சனை கள் தீரும்.

மேலும் இந்த பழத்தை சாப்பிட்டு வந்தால் இரத்த சோகை வரமால் தடுக்கப்படுகிறது.

அதன் வேர் நரம்புகளுக்கு வலிமை சேர்க்கும். மேலும் இதன் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து டீ போன்று தயார் செய்து குடித்து வர குடல் பூச்சிகள், குடல் புண்களை சரி செய்யும்.

மேலும் இந்த பழம் உண்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. மேலும் இந்த பழத்தின் விதையை பொடி செய்து காலையில் குடித்து வர ஆண்மை பிரச்சனை தீரும்.

மேலும் படிக்க: குறட்டை பிரச்சனை தொல்லையா? இதை ட்ரை பண்ணுங்க கொர்..கொர்.. ஒழிந்துவிடும்..!

Exit mobile version