சிறுநீரக கற்களை போக்கும் பொங்கல் பூ..!! சிறுகண் பீளையின் பயன்கள் கேட்டால் அசந்து போயிடுவீங்க..!!

0
182
xr:d:DAF0Ne0g8cI:871,j:1434813466221635117,t:24012906

sirukan peelai: தைப்பொங்கல் அன்று அனைவரும் வீடுகளிலும் பயன்படுத்தப்படும் பூ தான் பொங்கல் பூ என்று அழைக்கப்படும் சிறுகண்பீளை. இந்த பூக்களை பொங்கல் அன்று பயன்படுத்துவோம். ஆனால் இந்த பூ ஒரு சிறந்த மருத்துவக் குணம் கொண்ட பூ என்பது பாதி பேருக்கு தெரியாத ஒன்று. இந்த செடிகளை மறக்க கூடாது என்பதால் தான் இதனை பொங்கல் போன்ற விழாக்களால் பயன்படுத்தி வந்தோம்.

அதிலும் மாட்டுப்பொங்கல் அன்று இதனை இந்த பூக்கள் கொண்ட செடியை மாடுகளின் கழுத்தில் கட்டி விடுவார்கள். இந்த செடியை தற்போது அனைவரும் பூளாப்பூ என்று அழைப்பதுண்டு. இந்த சிறுகண்பீளையின் பயன்கள் என்னவென்று இந்த பதிவில் காண்போம்.

சிறுகண்பீளை பயன்கள் – sirukan peelai

இந்த சிறுகண்பீளையின் பூக்களை எடுத்து தண்ணீரில் காய்ச்சி காலை, மாலை இருவேளைகளில் குடித்து வந்தால் பித்தப்பையில் உள்ள கற்களை நீக்கி விடுகிறது. சிறுநீரக கற்களை நீக்க இதனை விட சிறந்த மருந்து இல்லை என்று தான் கூறவேண்டும்.

மேலும் இதன் இலைகளை ரசம் செய்து வைத்து குடித்து வந்தால் உடலுக்கு நன்மையை கொடுக்கும்.

இதன் பூ மட்டும் இல்லை, இலை, வேர் ஆகியவற்றை எடுத்து, சிறுநெருஞ்சில் மூலிகை, வாழத்தண்டு சாறு ஆகியவற்றை சேர்த்து ஒன்றாக அரைத்து பிறகு அதனை நன்கு காய்ச்சி காலை, மாலை சேர்த்து குடித்து வர சிறுநீரக கற்கள் கரைந்துவிடும்.

மேலும் சிறுநீர் சம்பந்தப்பட்ட அனைத்திற்கும் இது சிறந்த தீர்வாக உள்ளது. பித்தவாதம் பாேன்றவை குணப்படுத்தப்படுகிறது.

மேலும் படிக்க: உணவு சாப்பிடும் போது கட்டாயம் இதை செய்யாதீர்கள்..!! ஆபத்தாகிவிடும்..!!