Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மத்திய பட்ஜெட்! அட போங்கப்பா இந்த வருடம் இது இல்லையாம் சோகத்தில் நாடாளுமன்ற பணியாளர்கள்!

நாடாளுமன்றத்தில் வருடம்தோறும் தாக்கல் செய்யப்படும் மத்திய பட்ஜெட் ஆனது அதிகமான பக்கங்களில் அச்சிடப்பட்டு துணிப்பைகளில் கட்டப்படும் இந்த அச்சிடும் பணிகள் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு சுமார் 2 வாரங்களுக்கு முன்பே ஆரம்பம் ஆகிவிடும். இதன் ஆரம்ப நிகழ்வாக அல்வா தயாரிக்கும் பணி நடைபெறுகிறது.

இதில் நிதி அமைச்சர் மற்றும் இணை அமைச்சர்கள் பங்கேற்பார்கள். இந்த நிகழ்ச்சியுடன் ஆரம்பமாகும் பட்ஜெட் அச்சிடும் பணிகளில் ஏராளமான ஊழியர்கள் பங்கேற்க இருக்கிறார்கள். அவர்கள் எல்லோரும் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் வரையில் தனிமைப் படுத்தப் படுகிறார்கள், குடும்பத்தினருடன் தொலைபேசியில் பேசுவதற்கு அனுமதி இல்லை என்றும் சொல்லப்படுகிறது.

சென்ற வருடம் நோய் தொற்று பரவலை கருத்தில் வைத்து டிஜிட்டல் முறையில் பட்ஜெட் ஆவணங்கள் உள்ளிட்டவற்றை உண்டாக்கி உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது. இந்த சூழ்நிலையில், நடப்பு ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தயாரிக்கும் பணிகள் நேற்று ஆரம்பமாகின. நோய்தொற்று அச்சுறுத்தல் காரணமாக, அல்வா தயாரிப்பு நிகழ்ச்சி இந்த வருடம் கிடையாது, பணியாளர்கள் எல்லோருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன என்று சொல்லப்படுகிறது.

Exit mobile version