Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சிவகங்கையில் கொந்தளிக்கும் திமுக நகர செயலாளர்கள்! கடும் குழப்பத்தில் திமுக தலைமை!

திமுக இரு தொகுதிக்கு ஒரு மாவட்ட பொறுப்பாளர்களை அறிவித்து இருக்கின்றது மாவட்ட பொறுப்பாளர்களை நியமிப்பதற்குகூட ஐபேக் நிறுவனம் அறிக்கை கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது திமுக. சில நாட்களுக்கு முன்னர் மதுரை வடக்கு மாவட்ட செயலாளராக பொன் முத்துராமலிங்கம் நியமிக்கப்பட்டிருக்கிறார் அதனைத்தொடர்ந்து சிவகங்கை ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு இன்னமும் கூடுதலாக மாவட்ட பொறுப்பாளர்கள் நியமிக்கப்படாமல் இருக்கின்றது. சிவகங்கை ராமநாதபுரம் மாவட்டங்களில் தொகுதிகளை பிரித்து மாவட்ட பொறுப்பாளர்கள் சிலரை நியமனம் செய்ததற்கு ஒன்றிய செயலாளர்கள் நகர செயலாளர்கள் வரை ஒத்துழைப்பு வழங்காமல் தலைமைக்கு புகார் அளித்து இருக்கிறார்கள்.

அந்த வகையிலே சிவகங்கை மாவட்டத்தை இரண்டாக பிரித்து திருப்பத்தூர் மற்றும் காரைக்குடி ஆகிய தொகுதிகளுக்கு மாவட்ட பொறுப்பாளராக பெரியகருப்பன் அவர்களையும் மானாமதுரை சிவகங்கை ஆகிய பகுதிகளுக்கு மாவட்ட துணைச் செயலாளராக இருக்கும் சேங்கை மாறனையும் நியமிப்பதற்கு திமுக தலைமை முடிவு செய்திருப்பதாக கட்சி நிர்வாகிகளுக்கு தகவல் கிடைக்கவே 12ஆம் தேதி இராமநாதபுரம் வந்திருந்த முன்னாள் அமைச்சர் எ.வ. வேலுவிடம் புகார் மனுக்களை கொடுத்திருக்கிறார்கள்.

ஒன்றிய செயலாளர்கள் முதல் நகர செயலாளர்கள் வரை சேங்கைமாறன் மாவட்ட பொறுப்பாளராக இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து புகார் கொடுத்திருக்கும் திமுகவின் முக்கிய நிர்வாகிகளிடம் பேச்சுக் கொடுத்தபோது சிவகங்கை மாவட்டத்தில் கிருஷ்ணன் காலத்திற்குப் பின்னர் திமுக ஒரு குறிப்பிடத்தக்க வளர்ச்சி அடையவில்லை கடந்த சட்டமன்ற தேர்தலின் போது சிவகங்கை தொகுதி திமுக வெற்றி பெற வேண்டிய தொகுதி அந்த வெற்றியை கிடைக்கவிடாமல் செய்தது அதிமுக கிடையாது திமுகவினர் தான் இது அனைவருக்கும் தெரியும்.

மானாமதுரை தொகுதியில் 2011ம் வருடம் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் தமிழரசி ரவிக்குமார் அவர்களுக்கு தெரிந்தே வெற்றி வாய்ப்பை இழக்க செய்தார்கள் திமுகவின் நிர்வாகிகள் அதிலே ஒருவர்தான் சேங்கைமாறன் அவர் மட்டும் தமிழரசி கொடுத்த ஒரு கோடி ரூபாய் பணத்தை திருபுவனம் ஒன்றியத்தில் சரியாக மக்களுக்கு செலவழித்து இருந்தால் தமிழரசி வெற்றியடைந்து இருப்பார். அந்தப் பணத்தை வைத்து அமெரிக்கா போய்விட்டார் சேங்கை. அவருடைய தோல்விக்கு காரணம் என்ன என்பதை கருணாநிதியிடம் அப்போதே தெரிவித்திருந்தார் 2016 ஆம் போட்டியிட்ட சித்திரை செல்வி நடந்து முடிந்த இடைத்தேர்தலில் போட்டியிட்ட இலக்கியதாசன் ஆகியோர் தலைமைக் கழகத்திற்கு நிறைய புகார்களை அளித்திருக்கிறார்கள் அந்த புகாரை அடிப்படையாகக்கொண்டு ஐபேக் குழு விசாரணை நடத்தி வருகிறார்கள் காரைக்குடியில் முன்னாள் அமைச்சர் தமிழரசி மற்றும் சேங்கை மாறன் ஆகியோரை நேரில் அழைத்து விசாரணை நடத்தி இருக்கின்றார் எ.வ.வேலு.

இந்தப் புகார்கள் தொடர்பாக சிவகங்கை மாவட்ட திமுக துணை பொது செயலாளர் சேங்கைமாறனிடம் விசாரித்தபோது என் மீது எந்த ஒரு புகாரும் தலைமைக்கு அனுப்பப்படவில்லை நான் யாரையும் தோற்கடிக்கவும் இல்லை.மக்கள் தான் ஓட்டுப்போட்டார்கள் அதற்கு நான் எவ்வாறு பொறுப்பேற்க இயலும். இதுவரை நான் கட்சியின் வளர்ச்சிப்பணியில் ஈடுபட்டு கொண்டிருக்கின்றேன் என்னுடைய குறிக்கோள் கட்சியை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்வதுதான் எனக்கு மாவட்ட பொறுப்பாளர் பதவி வழங்கினால் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களை வெற்றிபெற வைத்து கட்சியின் தலைவர் முன்பு நிறுத்துவேன் என்று தெரிவித்தார்.

Exit mobile version