அந்த காலகட்டத்தில் எம்ஜிஆர் மாபெரும் பொருட் செலவில் தனது அனைத்து பணத்தையும் வைத்து ‘உலகம் சுற்றும் வாலிபன் ‘ என்ற படத்தை எடுத்து இயக்கி நடித்தார் .
அப்படி இந்த படம் வெளிவந்தால் மக்கள் எம் ஜி ஆரின் பக்கம் சாய்ந்து விடுவார்கள் என நினைத்த, அன்றைய ஆளும் கட்சியில் இருந்த திமுக , இந்த படத்தை வெளிவராமல் தடுக்க பல்வேறு இடஞ்சல்களை எம்ஜிஆருக்கு கொடுத்தது.
எந்த தியேட்டர்களும் இதை வாங்கக்கூடாது. விநியோகஸ்தர்களும் இதை வாங்க கூடாது. எந்த தியேட்டர்களிலும் இந்த படத்தை போடக்கூடாது என திமுக, நிறைய பிரச்சனைகளை எம்ஜிஆருக்கு கொடுத்தது. போஸ்டர்கள் கூட ஒட்டக்கூடாது என போஸ்டர்களின் வரியை கூட அதிகப்படுத்தியது திமுக.
அதனால் மாபெரும் செலவில் , தனது கை காசு எல்லாம் செலவு செய்து, எடுத்த ‘ உலகம் சுற்றும் வாலிபன்’ என்ற படத்தை எப்படி வெளியிடுவது என எம்ஜிஆர் மிகவும் வருத்தத்தில் இருந்தாராம்.
அப்பொழுது பிரிமியர் ஷோ என்று ஒன்று இருக்கும். படம் வெளிவரும் பொழுது நடிகர்கள் முன்னரே பார்ப்பதற்காக பிரீமியர் ஷோ இருக்கும். எந்த படம் வெளி வந்தாலும் எம்ஜிஆரும் சிவாஜியும் இருவரும் இணைந்து சென்று பார்ப்பது வழக்கமாக இருந்ததாம்.
அப்படி அரசு எம்ஜிஆரின் படத்தை வெளியிடாமல் தந்த சிக்கலில், சிவாஜி தாமாகவே முன்வந்து “அண்ணே யார் படத்தை வெளிவிடாமல் போனால் என்ன?” “என் தியேட்டரில் உங்கள் படத்தை நான் வெளியிடுகிறேன் என்று சொன்னாராம்..
எம்ஜிஆர் உடனே ” இல்லை சிவாஜி இது ஆளும் கட்சி செய்யும் சிக்கல்கள் நீ இதை வெளியிட்டால் உனக்கு பிரச்சனை வரும் என்று சொன்னாராம்” .
ஆனால் படம் வெளிவந்த பிறகு சிவாஜியின் தியேட்டரில் தான் பிரிமியர் ஷோ வெளியிடப்பட்டது.