Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வில்லனாக எப்ப நடிக்க போறீங்க… ரசிகர்களின் கேள்விக்கு மழுப்பலான பதில் சொன்ன சிவகார்த்திகேயன்!

வில்லனாக எப்ப நடிக்க போறீங்க… ரசிகர்களின் கேள்விக்கு மழுப்பலான பதில் சொன்ன சிவகார்த்திகேயன்!

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள பிரின்ஸ் திரைப்படம் இன்று வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

சிவகார்த்திகேயன் நடித்துள்ள பிரின்ஸ் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. இந்நிலையில் முதல் நாள் முதல் காட்சி பார்த்த ரசிகர்கள் இணையத்தில் நெகட்டிவ் விமர்சனங்களை வழங்கியுள்ளனர். நகைச்சுவை படமாக உருவாக்கப்பட்ட இந்த படத்தின் நகைச்சுவைக் காட்சிகள் சுத்தமாக ஒட்டவில்லை என்று கூறியுள்ளனர். மேலும் “மதுரை முத்து பண்ணும் ஸ்டாண்ட் அப் காமெடி போல இருப்பதாகவும் “ கூறி வருகின்றனர். இதனால் பிரின்ஸ் படம் முதல் காட்சியிலேயே நெகட்டிவ் விமர்சனங்களை சந்தித்துள்ளது.

ப்ரின்ஸ் திரைப்படத்தை ஒரு குறுகிய கால படமாக உருவாக்கப்பட்டு இன்று ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த படத்தினை இயக்குனர் அனுதீப் இயக்கியுள்ளார். அவர் இயக்கிய ஜதி ரத்னலு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதை அடுத்து அவருக்கு இந்த பட வாய்ப்பு வழங்கப்பட்டது. சிவகார்த்திகேயனுடன், சத்யராஜ், பிரேம்ஜி அமரன், மரியா உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.

இந்நிலையில் படத்தின் ப்ரமோஷனாக சமீபத்தில் டிவிட்டரின் மூலம் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார் சிவகார்த்திகேயன். அதில் ஒரு ரசிகர் “எப்போது வித்தியாசமான வில்லன் வேடங்களில் நடிக்க போகிறீர்கள். உங்களை வித்தியாசமான வேடங்களில் காண ஆவலாக உள்ளேன்” எனக் கேட்டார்.

அதற்கு சிவகார்த்திகேயன் “வில்லன் வேடங்களில் நடிப்பது இயக்குனர்கள் சொல்லும் கதை மற்றும் அந்த கதாபாத்திரம் பொறுத்துதான் அமையும். ஆனால் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிப்பேன்” எனக் கூறியுள்ளார்.

Exit mobile version