நடிகர் சிவகார்த்திகேயன் தமிழக அரசு சார்பாக நோய்தொற்று குறித்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
நம்முடைய நாட்டை பொறுத்தவரையில் நோய்த்தொற்று எண்ணிக்கையை மிக அதிகமாகி சென்றுகொண்டிருக்கிறது. ஆகவே அரசு பொது மக்களிடையே நோய்த்தொற்று பாதுகாப்பு நெறி முறைகள் தொடர்பாக தொடர்ச்சியாக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. திரைத்துறை பிரபலங்கள் மூலமாக நோய் தொற்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் அரசு தற்சமயம் செயல்பட்டு வருவதாக சொல்கிறார்கள்.
அந்த வகையில், தற்சமயம் நடிகர் சிவகார்த்திகேயன் தமிழக அரசு சார்பாக நோய்த்தொற்று தொடர்பான விழிப்புணர்வு காணொளி ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.. அதாவது நோய் தொற்று வேகமாக பரவி மனிதர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் பல உயிர்கள் பலியாகி இருக்கிறது. இதனை தடுப்பதற்காக நம்முடைய தமிழக அரசும், சுகாதாரத் துறையும், பலவிதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள் என்று தெரிவித்திருக்கிறார்.
இதனை தடுப்பதற்காக மாநிலஅரசும், காவல்துறையும், பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். மக்களுக்கு நிறைய விதிமுறைகளை தெரிவித்து இருக்கிறார்கள். அதில் மிகவும் முக்கியமானது நோய்தொற்று தடுப்பூசி போட்டுக் கொள்வது என்று தெரிவித்திருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன்.
தமிழக அரசு அறிவித்த கொரோனா விதிமுறைகளை பின்பற்றுங்கள் – நடிகர் சிவகார்த்திகேயன் விழிப்புணர்வு!#SunNews | #SivaKarthikeyan | #Corona2ndWave | #TamilNadu | @Siva_Kartikeyan pic.twitter.com/VFRnCXoeXs
— Sun News (@sunnewstamil) May 21, 2021
யாரும் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம் மிக மிக அவசியம் என்றால் மட்டுமே வெளியே செல்ல வேண்டும். அப்படி வெளியே சென்றாலும் கூட சமூக இடைவெளியை பின்பற்றவேண்டும் என்று தெரிவித்திருக்கிறார். நம்முடைய கைகளை எப்போதும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். அதோடு அதனை விடவும் முக்கியமான விஷயம் வெளியில் செல்லும் போது அனைவரும் முக கவசம் அணிந்து செல்லவேண்டும் இதுவெல்லாம் உங்களுக்கு தெரிந்த விஷயம் தான் என்று தெரிவித்து இருக்கிறார் சிவகார்த்திகேயன்.
இவை அனைத்தையும் கடைபிடிப்பது நம்முடைய கடமை அது மட்டுமல்லாமல் நோய்தொற்றுக்கு தொடர்பாக எந்த ஒரு பயமும் இல்லாமல் தன்னுடைய குடும்பத்தையும் மறந்து நம் எல்லோருக்காகவும் இந்த நோய் தொற்றை எதிர்த்து போராடிக்கொண்டிருக்கும் முன்களப்பணியாளர்களுக்கு நாம் செய்ய வேண்டிய மரியாதையும் இதுவாகத்தான் இருக்கும் என்று தெரிவித்திருக்கின்றார். நான் எல்லோரும் நினைத்தால் நிச்சயமாக இந்த நோய்களில் இருந்து மீண்டு வர இயலும் ஒன்றிணைவோம் தொற்று இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம், நம்மையும் காப்போம், நாட்டை காப்போம், மக்களை காப்போம் என்று தெரிவித்திருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன்.