Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மஞ்சள் நிற உடை, லூஸ் ஹேர், பார்ப்பவர்களை சொக்கி இழுக்கும் குக் வித் கோமாளி பிரபலத்தின் இன்றைய புகைப்படம்…………

Representative purpose only

விஜய் டிவியில் ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானவர் சிவாங்கி தனது குரலினால் பல அவமானங்களையும், ட்ரோல்களையும் சந்தித்துள்ளார் சிவாங்கி.

இந்த நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் செய்யப்பட்ட சிவாங்கி ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் பங்கெடுத்து கொண்டார். எந்த குரலினால் அவமானப்படுத்தபட்டரோ அதே குரலின் மூலம் பல ரசிகர்கள் கூட்டத்தினை பெற்றார்.

‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி முதல் மற்றும் இரண்டாவது சீசனை சிவாங்கிக்காகவே நிறைய பேர் பார்த்தனர்.

விஜய் டிவியின் மற்றொரு பிரபலமான புகழ் மற்றும் சிவாங்கியின் காம்போ காமெடியில் ஹிட் அடித்தது. அஸ்வின் மற்றும் சிவாங்கி காம்போ இளசுகளின் மனசை தட்டிப் பறித்தது.

சிவாங்கியின் ராஜமாதா, டோரா, அனபெல்லா, பள்ளி மாணவி, இம்சை அரசன் போன்ற வேஷங்கள் ஒவ்வொரு எபிஸோடிலும் பிரபலம் அடைந்தன.

‘குக் வித் கோமாளி’ புகழை தொடர்ந்து சிவாங்கி நிறைய விருது வாங்கினார், திரைப்படங்களில் பாடல்கள் பாடிக்கொண்டு வருகிறார். சிவகார்த்திகேயனின் டான் திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

சிவாங்கியின் பெற்றோர்கள் இருவருமே பிரபல இசை கலைஞர்கள் ஆவர். சிவாங்கியின் அம்மா பின்னி கிருஷ்ணகுமார் சந்திரமுகி திரைப்படத்திற்காக ராரா பாடலை பாடியிருக்கிறார்.

சிவாங்கி இன்று அழகிய புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

 

 

 

 

 

 

 

 

Exit mobile version