உத்தவ் தாக்கரே தலைமையிலான ஆட்சி: காங்கிரஸ் எடுத்த அதிரடி முடிவு
மகாராஷ்டிரா மாநிலத்தில் நாளை சிவசேனா தலைமையில் கூட்டணி ஆட்சி பொறுப்பேற்க உள்ள நிலையில் சிவசேனா அமைச்சரவையில் காங்கிரஸ் பங்கேற்காமல் வெளியிலிருந்து ஆதரவு கொடுக்கும் என்று நேற்றுவரை கூறப்பட்டது. இந்த நிலையில் திடீர் திருப்பமாக காங்கிரஸ் கட்சியும் அமைச்சரவையில் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது
மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நடந்த அரசியல் குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நாளை உத்தவ் தாக்கரே முதலமைச்சராக பதவியேற்க உள்ளார். அவருடன் இணைந்து 15 சிவசேனா கட்சியை சேர்ந்தவர்களும், 13 தேசியவாத கட்சியை சேர்ந்தவர்களும் அமைச்சர்களாக பதவி ஏற்க உள்ளனர். மேலும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் துணை முதல்வராக பதவி ஏற்பார் என்று கூறப்படுகிறது
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி இந்த ஆட்சிக்கு வெளியிலிருந்து ஆதரவு கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென அக்கட்சியை சேர்ந்த 13 பேர்கள் நாளை அமைச்சர்களாக பதவியேற்க இருப்பதாகவும் அது மட்டுமின்றி காங்கிரஸ் கட்சிக்கு சபாநாயகர் பதவி வழங்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது
இதனை அடுத்து நாளை முதல்வர், துணை முதல்வர் மற்றும் சுமார் 40 அமைச்சர்கள் பதவி ஏற்பார்கள் என்றும் இந்த பதவியேற்பு விழாவிற்கு இந்தியாவில் உள்ள முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் வருகை தர இருப்பதாகவும் கூறப்படுகிறது