மகாராஷ்டிரா மாநிலத்தில் திடீர் திருப்பம்: சிவசேனா-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி?

0
157

மகாராஷ்டிரா மாநிலத்தில் திடீர் திருப்பம்: சிவசேனா-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி?

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆட்சி அமைக்க தனிப்பெரும் கட்சியான பாஜகவை சமீபத்தில் அம்மாநில ஆளுநர் அழைப்பு விடுத்த நிலையில், தற்போது திடீர் திருப்பமாக சிவசேனா மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது

பாஜகவுடன் முதல்வர் பதவிக்கான பிரச்சனைகள் இருந்ததால் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க சிவசேனா முடிவு செய்தது. இதனையடுத்து மத்திய அரசிலிருந்து சிவசேனா வெளியே வந்தால், சிவசேனாவுடன் இணைந்து ஆட்சி அமைப்பது குறித்து பரிசீலனை செய்யப்படும் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் அவர்கள் கூறியதாக சமீபத்தில் செய்திகள் வெளியானது

இந்த நிலையில் மத்திய அரசில் இருந்து சிவசேனா வெளியே வருமா? என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்த நிலையில் இன்று திடீரென அக்கட்சியை சேர்ந்த மத்திய அமைச்சர் அரவிந்த் சாவந்த் தனது அமைச்சர் பொறுப்பை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இதனை அடுத்து பாஜக கூட்டணியை நிரந்தரமாக முறித்து கொள்ள சிவசேனா முடிவு செய்துள்ளது என்பது உறுதியாகிறது

பாஜகவின் மத்திய அரசிலிருந்து சிவசேனா வெளியே வருவது உறுதி செய்ததை அடுத்து தற்போது அக்கட்சியுடன் இணைந்து மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பது குறித்து காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் இன்று அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

மகாராஷ்டிரா ஆளுநர் பாஜகவை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்து இருப்பினும் சிவசேனா ஆதரவு இல்லாமல் அம்மாநிலத்தில் பாஜகவால் மெஜாரிட்டியை நிரூபிக்க முடியாது. எனவே பாஜக ஆட்சி கவிழ்ந்ததும், சிவசேனா ஆட்சி அமைக்க உரிமை கோரும் என்றும் அக்கட்சிக்கு காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆதரவு அளிக்கும் என்று கூறப்படுவதால் மகாராஷ்டிராவில் திடீர்திருப்பம் ஏற்பட்டு உள்ளதாக கருதப்படுகிறது