Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

டெல்லி காற்று மாசுவை தடுக்க விஞ்ஞானி கூறிய அசத்தல் ஐடியா!

டெல்ல்லியில் காற்று மாசு என்பது ஒரு பெரும் பிரச்சனையாக இருக்கிறது. சுப்ரீம் கோர்ட்டு தலையிட்டு பல உத்தரவுகளை மத்திய மாநில அரசுகள் விதிக்கும் அளவுக்கு இந்த காற்று மாசு விவகாரம் மிகவும் சீரியஸாக உள்ளது. காற்று மாசு ஏற்படுவதற்கு மிக முக்கிய காரணம் பஞ்சாப், ஹரியானா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் விவசாயிகள் தங்களுடைய கழிவுகளை எரிப்பதால் ஏற்படும் புகையினால் தான் ஏற்படுகிறது என மத்திய மாநில அரசுகள் சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். இதனையடுத்து விவசாயிகளுக்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் பிரம்மோஸ் ஏரோபேஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் ஏவுகணை விஞ்ஞானியான சிவதாணு பிள்ளை என்பவர் இன்று கன்னியாகுமரியில் உள்ள ஒரு கல்லூரி ஒன்றில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியின் போது அவர் பேசியபோது ‘டெல்லியில் காற்று மாசு ஏற்பட பஞ்சாப், ஹரியானா, மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள விவசாய கழிவுகளை எரிப்பதே முக்கிய காரணம் ஆகும்

இந்த நிலையில் இந்த கழிவுகளை எரிக்காமல் இவற்றை மின்சாரம் தயாரிக்க பயன்படுத்தும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இது குறித்த திட்டம் ஒன்று ஏற்கனவே மத்திய அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை விரைவில் செயல்படுத்தினால் விவசாய கழிவுகள் எரிக்கப்படுவதை தவிர்த்து, அதை மின்சாரம் தயாரிக்க மாற்று ஏற்பாடு செய்யலாம். இதனால் மின்சாரம் கிடைப்பதோடு காற்று மாசும் தடுக்கப்படுகிறது. இந்த திட்டத்தை விரைவில் அரசு செயல்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்

Exit mobile version