நமது உடலில் இரத்த சிவப்பணுக்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்க வேண்டியது முக்கியம்.இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தால் இரத்த சோகை,இரும்புச்சத்து குறைபாடு பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.
ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை உட்கொண்டால் உடலில் இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.உடலில் இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறைந்தால் மயக்கம்,உடல் சோர்வு போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் பழங்கள்:
1)மாதுளை
தினமும் ஒரு மாதுளை பழத்தை சாப்பிட்டு வந்தால் உடலில் இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
2)பீட்ரூட்
தினமும் ஒரு பீட்ரூட்டை அரைத்து சாறு எடுத்து பருகி வந்தால் இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்.
3)தர்பூசணி
கோடை கால பழமான தர்பூசணி இரத்த விருத்திக்கு உதவுகிறது.நீர்ச்சத்து நிறைந்த தர்பூசணி உடல் சூட்டை தணிக்க உதவுகிறது.
4)ஆரஞ்சு
சுவை மிகுந்த ஆரஞ்சு பழத்தை தினமும் சாறு பிழிந்து பருகினால் இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
5)கொய்யா பழம்
தினமும் சிவப்பு கொய்யா பழத்தை அரைத்து சாறு எடுத்து குடித்து வந்தால் இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
6)ஆப்பிள்
அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஆப்பிள் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் இரத்த உற்பத்தி அதிகரிக்கும்.இரும்புச்சத்து குறைபாடு இருப்பவர்கள் ஆப்பிள் பழம் சாப்பிடுவது நல்லது.இது தவிர பேரிச்சம் பழம்,அத்திப்பழம்,உலர் பழங்களை சாப்பிட்டு வந்தால் இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.