Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அரசு பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்து!! ஆறு பேர் பலி!

#image_title

கர்நாடக மாநிலம் குடகு மற்றும் தட்சிணக் கண்ணட மாவட்ட எல்லை பகுதியிலுள்ள சம்பாஜே என்ற இடத்தில் அரசு பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் மூன்று குழந்தைகள் இரண்டு பெண்கள் உட்பட ஆறு பேர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்துள்ளனர்.
காரில் பயணம் செய்தவர்கள் மண்டியா மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது

மேலும் காரில் பயணித்த ஒரு ஆண் மற்றும் ஒரு குழந்தை சுள்ளியா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக காயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

அரசு பேருந்து சுள்ளியாவிலிருந்து விராஜ்பேட் நோக்கி சென்று கொண்டிருந்தது அப்போது எதிர் திசையில் மடிக்கேரி பகுதியில் இருந்து சுள்ளியாநோக்கி வந்த கார் சம்பாஜே பெட்ரோல் பங்க் அருகே ஒன்றோடு ஒன்று நேருக்கு நேர் மோதிக்கொண்டு.

இந்த விபத்து நடந்தது பஸ் பயணிகளில் ஒரு சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது சம்பவம் குறித்து மடிக்கேரி புறநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இறந்தவர்களின் சடலம் சுள்ளியாவிலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் வைக்கப்பட்டுள்ளது

Exit mobile version