Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மின்சாரம் பாய்ந்து துடிதுடித்து இறந்த ஆறு வயது ஆண் காட்டு யானை

மின்கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்து துடிதுடித்து இறந்த ஆறு வயது ஆண் காட்டு யானை

நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்துள்ள பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட பிதர்காடு பகுதியில் நாள்தோறும் ஒரு மூன்று காட்டுயானைகள அந்தப் பகுதிகளில் நடமாடி வருகிறது. இந்த நிலையில் அந்த மூன்று யானைகளும் அங்குள்ள ஒரு தனியார் தேயிலை தோட்டத்திற்கு உணவுக்காக வந்துள்ளது.

அப்போது உணவு தேவைக்காக அந்த கூட்டத்தில் இருந்த ஆறு வயது காட்டு ஆண் யானை பாக்கு மரத்தை சாய்த்துள்ளது. பாக்கு மரம் சாய்ந்த நிலையில் அங்கு இருந்த மின்கம்பியில் மரம் விழுந்து மின்கம்பி அறுந்து யானை மேல் விழுந்துள்ளது.

உடல் முழுவதும் மின்சார பாய்ந்து துடித்து விட்டு யானை இறந்த நிலையில் இதனை அறிந்த அப்பகுதி மக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். மின்சார இணைப்பை நிறுத்தி அங்கு வந்து வனத்துறையினர் ஆய்வு செய்யும் போது உணவு தேவைக்காக மரத்தை சாய்க்கும் போது மின்சாரம் பாய்ந்து யானை இறந்தது உறுதியானது

தொடர்ந்து விசாரண மேற்கொண்டு வரும் வனத்துறையினர் உடற்கூறு ஆய்வு செய்வதற்காக அடுத்த கட்ட பணிகளிலும் ஈடுபட்டுள்ளனர்.மின்சார பாய்ந்து ஒரு யானை மட்டும் இறந்த நிலையில் மற்ற யானைகள் அங்கிருந்து சென்றது பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

Exit mobile version