Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

எஸ்.ஜே சூர்யாவுக்கு இந்த மன நோய் இருக்கின்றது!!! நடிகர் விஷால் சமீபத்திய பேட்டியில் ஓபன் டாக்!!!

#image_title

எஸ்.ஜே சூர்யாவுக்கு இந்த மன நோய் இருக்கின்றது!!! நடிகர் விஷால் சமீபத்திய பேட்டியில் ஓபன் டாக்!!!

நடிகர் எஸ்.ஜே சூர்யா அவர்களுக்கு மனநோய் ஒன்று இருக்கின்றது என்று நடிகர் விஷால் அவர்கள் அளித்த சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.

நடிகர் விஷால் மற்றும் நடிகர் எஸ்.ஜே சூர்யா இருவருடைய நடிப்பில் மார்க் ஆண்டனி திரைப்படம் கடந்த செப்டம்பர் 15ம் தேதி வெளியானது. இந்த திரைப்படத்தை இயக்குநர் ஆதிக்கம் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார்.

மார்க் ஆண்டனி திரைப்படத்தில் ரிது வர்மா, சுனில், அபிநயா, ரெடின் கிங்ஸ்லி, இயக்குநர் செல்வராகவன் ஆகியோர் நடித்துள்ளனர். ஜவி பிரகாஷ் குமார் மார்க் ஆண்டனி திரைப்படத்திற்கு இசை அமைத்துள்ளார்.

டைம் டிராவல் கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட மார்க் ஆண்டனி திரைப்படத்தில் நடிகர் எஸ்.ஜே சூரியா அவர்களின் நடிப்பு ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்நிலையில் நடிகர் எஸ்.ஜே சூர்யா அவர்களுக்கு ஓசிடி நோய் இருப்பதாக நடிகர் விஷால் அவர்கள் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.

நடிகர் விஷால் அவர்கள் சமீபத்திய நேர்காணல் பேட்டியில் “நடிகர் எஸ்.ஜே சூரியா அவர்களுக்கு ஓசிடி பிரச்சனை இருக்கின்றது. மார்க் ஆண்டனி திரைப்படத்தின் படப்பிடிப்பில் மது அருந்தும் காட்சி ஒன்று இருந்தது. அந்த காட்சிக்காக பயன்படுத்திய கிளாஸ் ஒன்றை நடிகர் எஸ்.ஜே சூர்யா அவர்கள் உதவியாளரிடம் கழுவியதா என்று கேட்டார். உதவியாளர் புதிது என்று கூறினார். ஆனால் நடிகர் எஸ்.ஜே சூரியா அவர்கள் உதவியாளரிடம் மீண்டும் மீண்டும் கழுவி விட்டீர்களா என்று கேட்டு தொல்லை கொடுத்தார். அதன் பிறகு உதவியாளர் அந்த கிளாஸை நடிகர் எஸ்.ஜே சூர்யா கண் முன்னர் வைத்து கழுவினார். அதன் பிறகு நடிகர் எஸ்.ஜே சூர்யா சமாதானம் ஆனார்.

இதே போல மற்றொரு நாள் படப்பிடிப்பில் நடிகர் எஸ்.ஜே சூரியா அவர்கள் அணிந்திருந்த கூலிங் கிளாஸை அவருடைய உதவியாளர் பயன்படுத்தினார் என்று வேண்டுமென்றே கூறினேன். கோபம் அடைந்த எஸ்.ஜே சூர்யா உதவியாளர்களை அழைத்து கத்தினார். அதன் பின்னர் நானும், இயக்குநரும் நடிகர் எஸ்.ஜே சூர்யா அவர்களிடம் பொறுமையாக எடுத்து கூறினோம். பின்னர் நடிகர் எஸ்.ஜே சூர்யா அவர்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டு நடிக்க தொடங்கினார்” என்று விஷால் அவர்கள் கூறினார்.

நடிகர் எஸ்.ஜே சூர்யா அவர்களின் நடிப்பில் பொம்மை திரைப்படம் வெளியானது. பொம்மை திரைப்படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் தனக்கு ஓசிடி பிரச்சனை உள்ளது என்று வெளிப்படையாக கூறியிருந்தார்.

ஓசிடி என்பது தூய்மை குறித்த மன நோய் ஆகும். ஓசிடி எனப்படுவது அப்சஸிவ் கம்பல்ஸிவ் டிஸ்ஸார்டர் ஆகும். மனதை ஆட்டிப் படைக்கும் ஒருவிதமான நரம்பியல் குறைபாடு உள்ள நோயே ஓசிடி ஆகும். ஓசிடி என்ற நோய் மூளையில் உள்ள செரட்டோனின் என்ற வேதிப்பொருள் பற்றாக் குறையால் ஏற்படும் நோயாகும்.

இந்த ஓசிடி நோய் பல வகைகளில் காணப்படுகின்றது. நடிகர் எஸ்.ஜே சூர்யா அவர்களுக்கு இருப்பது தூய்மை குறித்த பயம் ஆகும். இந்த வகை ஓசிடி நோய் உள்ளவர்கள் தன்னை சுற்றி உள்ள புழுக்களை தூய்மையாக வைத்துக் கொள்ள விரும்புவர். மேலும் பொருள்களை அடிக்கடி கழுவிக் கொண்டே இருப்பார்கள்.

Exit mobile version