Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

திருமண தடையா? உடனே இந்த கோவிலுக்கு செல்லுங்கள்!

சேலத்திற்கு அருகிலே உடையாப்பட்டி என்ற பகுதியில் இயற்கையான சூழலில் முற்றிலுமாக மலைகளுடன் காட்சி தருகிறது அருள்மிகு கந்தாஸ்ரமம் திருக்கோவில். ஸ்ரீமத் சாந்தானந்த சரஸ்வதி சுவாமிகள் நெஞ்சில் கனவு போல தோன்றிய மலைகளும், அருவிகளும், நிறைந்த ஒரு குன்று தான் இன்று சேலம் அருகில் இருக்கின்ற கந்தாஸ்ரமம் ஆக காட்சியளிக்கிறது.

முருகனும், பார்வதி தாயாரும், எதிரெதிரே சன்னதி அமைத்து அமர்ந்திருப்பதை இந்த கிராமத்தை தவிர வேறு எங்குமே காண இயலாது என்று சொல்லப்படுகிறது. முருகன் சன்னதியை சுற்றிலும் மனைவியுடன் கூடிய நவக்கிரகங்களின் விக்கிரகங்கள் இருக்கின்றன. 16 அடி உயர தத்ராத்ரேய பகவான் இருந்து வருகிறார். சொர்ண ஆகர்ஷண பைரவர் இந்த தளத்தில் இருக்கிறார். இந்த தளத்தில் இருக்கின்ற சங்கடஹர பைரவர் மிகவும் சிறப்பு வாய்ந்தவர் என்று சொல்லப்படுகிறது.

வேதங்கள் நான்கு என்று சொல்லப்படும் அதே போல நான்கு வேதங்களுக்கு உரிய உருவங்கள் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. முருகனை சுற்றி வந்தால் நவக்கிரக தோஷம் நீங்கும் என்று ஜோதிட சாஸ்திரப்படி முருகனை சுற்றி மனைவியுடன் சார்ந்த நவகிரகங்கள் பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள். பிரதோஷம் அன்று பூஜை செய்வதற்காக நர்மதா நதியில் இருந்து எடுத்து வந்துள்ள பானலிங்கம் ஆன புவனேஸ்வரர், புவனேஸ்வரி, முருகன் சன்னிதானத்தில் இருந்து வருகிறது. வேத விநாயகர், ஆதிசங்கரர், உட்பட பல விக்கிரகங்கள் அழகுடன் மொத்தமாக ஒரே இடத்தில் இங்கே காட்சி தருகிறது. இவ்வாறான ஒரு காட்சியை இங்கு மட்டுமே காண முடியும் என்று தெரிவிக்கப்படுகிறது.

கார்த்திகை தீபத்தன்றும் மற்றும் வைகாசி மற்றும் ஆடி பதினெட்டாம் பெருக்கு போன்ற நிகழ்ச்சிகள் இங்கே மிக விமர்சையாக நடைபெறுகிறது. இந்த தளத்தில் வழிபட்டால் திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம், உள்ளிட்டவை கைகூடும் என்று சொல்லப்படுகிறது. அதோடு குருவருள் கிடைக்கும் நோயற்ற வாழ்வு குறைவற்ற செல்வம் போன்றவையும் தங்களுடைய வாழ்வில் நீங்காமல் இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. சங்கடங்கள் தீர சங்கடகர கணபதி வழிபாடு மிக சிறந்தது என்று சொல்கிறார்கள். இவற்றைத்தவிர பஞ்சமுக அனுமனை வணங்கி பக்தி, பலம், தைரியம், பூமி செழிப்பு, கல்வி, செல்வம் உள்ளிட்டவற்றை பெறலாம். வேண்டுதல் நிறைவேறியவர்கள் முருகனுக்கு பாலபிஷேகம் செய்து சந்தனக்காப்பு செய்து புத்தாடை அணிவித்து சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

Exit mobile version