இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான மக்கள் சருமம் சார்ந்த பிரச்சனைகளுக்கு ஆளாவது அதிகரித்து வருகிறது.தேமல்,அலர்ஜி,வண்டு கடி,படை,சொறி சிரங்கு போன்ற தோல் பிரச்சனைக்கு சிறந்த மூலிகை தீர்வு கொடுக்கப்பட்டுள்ளது.
சரும வியாதிகளுக்கான காரணங்கள்:
**கெமிக்கல் பயன்பாடு
**உணவு ஒவ்வாமை
**உடல் நலக் கோளாறு
**பூச்சி கடி
தேவையான பொருட்கள்:-
1)தேங்காய் எண்ணெய் – இரண்டு தேக்கரண்டி
2)வேப்ப எண்ணெய் – இரண்டு தேக்கரண்டி
3)விளக்கெண்ணெய் – இரண்டு தேக்கரண்டி
4)செம்மண் – ;நான்கு தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:-
ஸ்டெப் 01:
முதலில் ஒரு கிண்ணத்தை எடுத்து இரண்டு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும்.
ஸ்டெப் 02:
அதன் பிறகு இரண்டு தேக்கரண்டி வேப்ப எண்ணெய் ஊற்றி நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.
ஸ்டெப் 03:
அடுத்ததாக இரண்டு தேக்கரண்டி விளக்கெண்ணெய் ஊற்றி நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.
ஸ்டெப் 04:
பிறகு வேறொரு கிண்ணத்தில் நான்கு தேக்கரண்டி செம்மண் சேர்த்துக் கொள்ள வேண்டும்.அதன் பிறகு செம்மண் மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி 15 நிமிடங்களுக்கு ஊறவிட வேண்டும்.
ஸ்டெப் 05:
இப்படி செய்தால் செம்மண்ணில் இருக்கின்ற அழுக்கு தண்ணீரின் மேலே மிதந்து வரும்.அதை மட்டும் நீக்கிவிட வேண்டும்.பிறகு தண்ணீரை ஈர்த்துவிட வேண்டும்.
ஸ்டெப் 06:
அடுத்து இந்த செம்மண் பேஸ்ட்டை கலந்து வைத்துள்ள எண்ணெயில் போட்டு நன்றாக குழைத்துக் கொள்ள வேண்டும்.
ஸ்டெப் 07:
இந்த பேஸ்டை வண்டு கடி,படை,சொறி சிரங்கு போன்ற சரும பாதிப்புகள் மீது அப்ளை செய்தால் அவை சீக்கிரம் குணமாகிவிடும்.இந்த இயற்கை களிம்பு சரும பிரச்சனைகளை முழுமையாக குணப்படுத்த உதவுகிறது.
இந்த களிம்பு பூசும் பொழுது அரிப்பு,எரிச்சல் ஏற்பட்டால் அவை சொறியக் கூடாது.இந்த களிம்பில் உள்ள வேப்ப எண்ணெய் சருமத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
விளக்கெண்ணெய் சரும வறட்சியை போக்க உதவுகிறது.செம்மண் பயன்படுத்துவதால் சரும அலர்ஜி முழுமையாக குணமாகும்.அதேபோல் குப்பைமேனி,வேப்பிலை,மஞ்சள் போன்ற இயற்கை பொருட்களை அரைத்து பூசி குளித்து வந்தால் சருமப் பிரச்சனைகளில் இருந்து மீண்டுவிடலாம்.