ஒரே அடியில் இரண்டாகப் பிளந்த மண்டை! அதிர்ச்சியில் அப்பகுதி மக்கள்!
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே கருந்தேவன்பாளையத்தை சேர்ந்தவர் மாதேஸ்வரன். இவரது மனைவி மல்லிகா அவர்களுக்கு ஒரே மகன் சண்முகம். அவர்களின் எதிர்வீட்டில் வசித்து வருப்பவர் சின்ராசு. மல்லிகாவின் மகன் சண்முகம் கட்டிடங்களுக்கு வெல்டிங் செய்யும் வேலை பார்ப்பவர். இவரின் எதிர்வீட்டில் வசித்து வரும் சின்ராசு என்பவர் சண்முகதிடம் கூலிக்கு வேலை செய்துவந்தார். சின்ராசுவிடம் ஒரு கட்டிட பில்டிங் வேலையை முழுவதையும் கொடுத்தார். அந்த கட்டிட வேலை முடிந்தவுடன் சின்ராசு கூலி பணம் கேட்கும் பொழுது நீ செய்த வேலைகள் அனைதுற்கும் பணம் தந்து விட்டேன் என்று சண்முகம் கூறினார். தினமும் அவரிடம் மீதமுள்ள பணத்தை தருமாறு கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை சின்ராசு செல்போனில் தொடர்பு கொண்டு பணம் கேட்டுள்ளார். இனிமேல் உனக்கு எந்த பணமும் கொடுக்க முடியாது என்று கூறி சண்முகம் தொலைபேசியை துண்டித்துள்ளார். அதில் கோபமடைந்த சின்ராசு எதிர் வீட்டில் வசிக்கும் சண்முகத்தின் அம்மா மல்லிகாவை கட்டையால் அடித்தார். அதில் மல்லிகாவின் மண்டை இரண்டாக பிளந்தது. மல்லிகா பரிதாபமாக உயிரிழந்தார். இதனை குறித்து அப்பகுதி மக்கள் பள்ளிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த இன்ஸ்பெக்டர் சந்திரகுமார் வழக்குப்பதிவு செய்தார். சின்ராசு தலைமறைவான நிலையில். கொலையாளியை கண்டுபிடித்து குமராபளையம் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.