Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்துக்கள் தொடர்பான சர்ச்சை பேச்சு ராசாவின் மீது வழக்குப் பதிய தயங்கும் காவல்துறையினர்! ரவுண்டு கட்ட காத்திருக்கும் நீதிமன்றம்?

கடந்த மாதம் 6ம் தேதி சென்னை பெரியார் திடலில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முன்னாள் மத்திய அமைச்சரும், திமுகவின் துணைப் பொதுச் செயலாளருமான ராசா இந்து மதம் மற்றும் இந்து பெண்கள் தொடர்பாக பேசிய கருத்து தமிழ்நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த விவகாரம் குறித்து ராசா மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்து ஜே ஜே கட்சியின் நிறுவனர் ஜோசப் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனதில் அவர் தெரிவித்து இருந்ததாவது இரண்டு மதத்திற்கு இடையில் ராசாவின் பேச்சு விரோதத்தை உண்டாக்கி மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் விதத்தில் இருக்கிறது. ராசாவின் இந்த பேச்சால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை உண்டாகியுள்ளது.

வழக்கத்தில் இல்லாத மனுநூல் தொடர்பாக பேசி தேவையற்ற பிரச்சனைகளை ஏற்படுத்தியமே அவர் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்து வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் வழங்கினேன்.

ஆனால் ஆளும் கட்சியின் முக்கிய பொறுப்பில் இருப்பதால் அவர் மீதான புகாரை காவல் துறையினர் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள் என்று தெரிவித்திருக்கிறார்.

ஆகவே என்னுடைய புகாரின் பேரில் அவர் மீது வழக்குப்பதிவு செய்ய காவல்துறையினருக்கு உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவித்திருந்தார். இந்த மனு மிக விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வழக்கு விசாரணை மேற்கொள்ளப்பட்டால் ஒருவேளை வழக்கு தாக்கல் செய்த நபர் காவல் துறையினரின் மீது நம்பிக்கையில்லை என்று தெரிவித்தால் தானாக முன்வந்து நீதிமன்றமே இந்த வழக்கை எடுத்து விசாரிப்பதற்கான வாய்ப்புள்ளது என்றும் சொல்லப்படுகிறது.

மேலும் இந்த வழக்கில் தொடர்புடையவர் ஆறுமுகச்சியை சார்ந்தவர் என்ற காரணத்தால் காவல்துறையினர் இவர் மீது சரியான விசாரணை செய்ய மாட்டார்கள் என்ற சந்தேகம் நீதிமன்றத்திற்கு எழுந்தால் இந்த வழக்கில் நீதிமன்றம் நேரடியாக தலையிடுவதற்கான வாய்ப்பு அதிகம் இருக்கிறது என்று சொல்லப்படுகிறது.

Exit mobile version